எவ்வளவு கருப்பா இருந்தாலும் உடனே கலராக.. இந்த 2 பொருள் போதும்.. இனி நீங்களும் மில்க் பியூட்டியாக ஃபேஸ் க்ரீம்!!..

அழகு என்பது பெண்களைப் பொறுத்த வரை ஆராதனை செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதிலும் முக அழகை விரும்பாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி முக அழகினை பராமரிக்க நினைக்கும் பெண்களின் முகம் எவ்வளவு கருப்பாக இருந்தாலும் உடனே கலராக மாற்ற இரண்டு பொருட்கள் போதுமானது.

அதிகம் விலை இல்லாத வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருளை செய்யப்படும் ஃபேஸ் க்ரீமை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமை நிறம் ஒரு வாரத்தில் நீங்குவதோடு முகம் பார்க்க பளிச்சென்று பிரமிக்கத்தக்கக் கூடிய வகையில் மாறிவிடும்.

தேவையான பொருட்கள்

1.உருளைக்கிழங்கு – 1
2.தக்காளி – 2
3.சல்லடை
4. அலோவேரா ஜெல் – 1 முதல் 2 ஸ்பூன்
5.தேங்காய் எண்ணெய் – 2 சொட்டு
6. வைட்டமின் ஈ மாத்திரை – 2 சொட்டு
7. சின்ன பவுல்

ஃபேஸ் க்ரீம் செய்வதற்கான செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலை சீவி சுத்தம் செய்த பிறகு துருவியில் லேசாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அவ்வாறு துருவிய உருளைக்கிழங்கு துருவலை எடுத்து கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்து சல்லடையில் வைத்து அழுத்தும் போது அதில் இருக்கும் சாறு வெளியே வரும் இதை ஒரு சின்ன பவுலில் சேகரித்துக் கொள்ளவும்.

#image_title

இந்த உருளைக்கிழங்கு சாறு 2 டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் போதுமானது. இதைத் தொடர்ந்து நன்கு பழுத்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தையும் கழுவி உங்கள் கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்து தக்காளி சாறினை சல்லடையை கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தக்காளி சாறு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதை உருளைக்கிழங்கு சாறோடு கலந்து விடவும்.

தக்காளி முகத்துக்கு பொலிவை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் மருக்களையும், கரும்புள்ளிகளையும் அகற்றக் கூடிய ஆற்றல் கொண்டது.

அது போலவே உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் ஆனது உங்கள் முகத்திற்கு பொலிவை தருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் முகத்தில் இருக்கும் கருமை நிறத்தை போக்கி வெண்மையாக பளிச்சென்ற தோற்றத்தை தந்துவிடும்.

இந்த இரண்டும் கலக்கப்பட்ட கலவைகளோடு ஆலோவேரா ஜெல் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி ஒன்றரை ஸ்பூன் அளவு சேர்த்து ஒன்றாக கலக்குங்கள்.


அத்தோடு ஒன்று அல்லது இரண்டு சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை விட்டுக் கொள்ள வேண்டும். இந்த கலவையை மிக நன்றாக கலக்கி கொண்டால் ஜெல் பதத்தில் நம் முகத்திற்கு போடக்கூடிய கிரீம் கிடைக்கும்.

மேலும் உங்கள் தோலை பொலிவாக மாற்ற வைட்டமின் ஈ மாத்திரையில் இருந்து இரண்டு சொட்டுக்கள் இந்த கலவையில் விட்டு நன்றாக கலந்து விடுங்கள்.
தற்போது ஃபேஸ் க்ரீம் ரெடியாகிவிட்டது, இதை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஃபேஸ் கிரீமை பயன்படுத்தும் முறை

இந்த ஃபேஸ் க்ரீமை உங்கள் முகத்தை நன்கு கழுவிய பிறகு லேசாக முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து கண்களின் அடிப்பகுதி மற்றும் மூக்கின் கீழ் பகுதி, தாடை பகுதி, கழுத்துப் பகுதி என எல்லா பகுதிகளிலும் சுழற்சி முறையில் உங்கள் கைகளைக் கொண்டு லேசாக மசாஜ் செய்து இந்த கிரீம் எல்லா பகுதியிலும் படக்கூடிய வகையில் ரொட்டேட் முறையில் அழுத்தம் தர தேய்க்க வேண்டும்.

இதனை அடுத்து மீண்டும் சிறிது ஃபேஸ்கிரீமை எடுத்து இதே போல் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். அத்தோடு இந்த கிரீமை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள்.

அப்படி நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கருப்பு நீங்கி மில்க் பியூட்டி போல் காட்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் கழுத்துக்கு கீழ் இருக்கும் கருப்பு, கண்களின் அடியில் இருக்கும் கருவளையம் கன்னத்தில் இருக்கும் மங்கு, மரு, பருக்கள் போன்றவை எளிதில் நீங்கி இருந்த இடம் தெரியாமல் மாறும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam