ரத்த அழுத்தமா..? கவலைய விடுங்க.. ஜப்பான் காரன் கண்டுபுடிச்சத பாருங்க.. ஆடிப்போயிடுவீங்க..!

உடல் நல பாதுகாப்பு ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. உலகையே ஜெயித்து வந்தாலும் கூட ஒரு மனிதனுக்கு உடல் நலம் நன்றாக இல்லை என்றால் அவன் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்தும் பயனில்லை என்று தான் கூற வேண்டும்.

உலகையே வென்ற அலெக்சாண்டாரால் கூட அவரது உடல்நல பிரச்சனையை வெல்ல முடியவில்லை. அதனால்தான் பெரும் பிரபலங்கள் கூட தொடர்ந்து அவர்களது உடல் நலம் மற்றும் உணவு முறைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதை பார்க்க முடியும்.

ரத்த அழுத்தமா?

முக்கியமாக ஒரு வயதிற்குப் பிறகு நிறைய நடிகர்கள் உணவின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். நிறைய உணவுகளை அவர்கள் தவிர்த்து வருவதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கூட அதிக உப்புள்ள காரமுள்ள உணவுகளை சாப்பிட மாட்டார்.

#image_title

அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார். 70 வயதை கடந்த பிறகும் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு அவரது உணவு முறை முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனெனில் அதிக உப்பை ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் காரணத்தினால்தான் ரத்த அழுத்தம் என்கிற பிரச்சனையே வருகிறது.

கவலைய விடுங்க

உலக அளவில் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ள நோயாளிகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் முக்கியமான நாடாக இருக்கிறது. ஏனெனில் உணவுகளில் அதிகமாக நாம் உப்பு சேர்த்துக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் ஒரு முறையை ஜப்பான் நாட்டில் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகளை வைத்து மட்டுமே மக்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஜப்பான் காரன் கண்டுபுடிச்சத பாருங்க

அந்த வகையில் ஜப்பான் தற்சமயம் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வழிமுறையை கண்டறிந்து இருக்கின்றனர். இதற்காக எலக்ட்ரானிக் முறையில் செய்யப்பட்ட ஒரு ஸ்பூன் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஜப்பான்.

#image_title

இந்த ஸ்பூன் பேட்டரி மூலமாக இயங்கக்கூடிய ஒரு ஸ்பூன் ஆகும் இது என்ன செய்யும் என்று கேட்டால் உப்பில்லா உணவைக் கூட சுவையானதாக மாற்றி கொடுக்கும் தன்மை கொண்டதுதான் இந்த ஸ்பூன் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்பூனில் உள்ள மின்சாரமானது ஸ்பூனை நாக்கில் வைக்கும் பொழுது நமக்கு உப்பு சுவையை நாக்கில் ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அந்த உணவில் உப்பு இருக்காது சொல்லப்போனால் சுத்தமாக உப்பே போடாத ஒரு உணவை நாம் உண்டு கொண்டிருப்போம் ஆனால் அதில் உப்பு போடப்பட்ட சுவையை இந்த ஸ்பூன் ஏற்படுத்திக் கொடுக்கும். தற்சமயம் வரவேற்பு பெற்று இருக்கும் இந்த சாதனம் ஜப்பானில் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam