இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

தமிழில் வெப்பம் மாலினி ஓகே கண்மணி இருமுகன் மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நித்யாமேனன் கடைசியாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வெறுமனே நடிகையாக மட்டுமில்லாமல் தன்னுடைய அபார நடிப்பால் தென்னிந்தியாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு உயர முயற்சி செய்து வருகிறார் நித்யா மேனன்.

எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக நடித்திருக்கிறார் நித்யா மேனன் அந்த வகையில் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளரது நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்திருந்த நித்யாமேனன் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் அளவுக்கு சினிமாவிற்காக தன்னை செதுக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் தெலுங்கு இந்தி என்று மூன்று இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் என மொத்தம் நான்கு மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நித்யாமேனன் இணையத்தை பயன்படுத்தி நடந்துகொண்டிருக்கும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் 10 எபிசோடு கிளாக் உருவாக உள்ளது.

புதுமுக இயக்குனர் இயக்கம் இந்த வரிசையில் நடிகை நித்யாமேனன் நீச்சலுடையில் சில காட்சிகளில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையா..? என்று கிண்டலடித்து வந்தனர்.

நீச்சல் உடையில் நடிப்பது குறித்து எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வராத நிலையில் நித்யாமேனன் கிண்டலுக்கு உள்ளானார். இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் சிக்கன மாறியுள்ளார் நித்யாமேனன்.

தன்னுடைய உடல் எடையை வைத்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நித்யா மேனன் நீச்சலுடையில் நடிப்பதற்காகவே தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகின்றது.

ஆனால் இந்த வெப்சீரிஸ் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது தான் நிதர்சனம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …