தாமரை விதை (மக்கானா) மசாலா

தாமரை விதைகள் மற்றும் உலர் மசாலாக்களை கொண்டு செய்யப்படும் ஈசியான எளிமையான மற்றும் ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும். இது பொதுவாக நவராத்திரி நோன்பு நாட்களில் வடமாநிலங்களில் செய்யப்படும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ் வகை.இதனை எப்படி செய்யலாம் என்பதை இனி பார்ப்போம்.

தாமரை விதையில் உள்ள சத்துக்கள்

பொட்டாசியம்

கால்சியம்

புரதம்

மாங்கனிசு

சோடியம்

பாஸ்பரஸ்

கொழுப்பு

மேலும் 100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளது. மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள்.

தேவையான பொருட்கள்

100 கிராம் தாமரை விதை

3/4 கப் வறுத்த வேர்க்கடலை

பிரதான உணவு

1 தேக்கரண்டி தூளாக்கப்பட்ட மிளகு

தேவையான அளவு கறிவேப்பிலை

1 1/2 தேக்கரண்டி நெய்

தேவையான அளவு இந்து உப்பு

செய்முறை

ஒரு பேனில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும்.

இப்போது மக்கானா எனப்படும் தாமரை விதைகளைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும்.

மக்கானா பொன்னிறமானதும் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பண்டிகை காலங்களில் மொறுமொறு மாலை நேர ஸ்நாக்ஸாக பரிமாறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …