பனங்கிழங்கு பாயசம்

பனங்கிழங்கினை கொண்டு எண்ணற்ற உணவுப் பண்டங்களை நமது முன்னோர்கள் தயாரித்து வந்தார். அந்த வரிசையில் இன்று நாம் பனங் கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனங்கிழங்கினை  பயன்படுத்துவதின் மூலம் நீரிழிவு வியாதியில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த பனங்கிழங்கு உணவுப் பொருட்களை கொடுத்து வருவதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இனி பனங்கிழங்கினை கொண்டு எப்படி பாயசம் செய்யலாம் என்பதை காண்போம்.

பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள்

இரும்புச் சத்து

கால்சியம்

நார்ச்சத்து

பாஸ்பரஸ்

தாதுக்கள்

வைட்டமின் பி பி1 சி

ஒமேகா 3

கொழுப்பு அமிலம்

தேவையானவை: 

பனங்கிழங்கு – 4, தேங்காய்ப்பால் – ஒரு கப், பனை வெல்லக் கரைசல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தலா  2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை

பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். 

இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். 

சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.  எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …