கடைசியா நீங்கதான் என்னை காப்பாத்தணும்.. நடு இரவில் வெற்றிமாறன் வீட்டுக்கு சென்ற இயக்குனர்.. அப்படி என்ன நடந்தது?

தமிழில் தொடர்ந்து படங்களின் வழியாக முக்கியமான கருத்துக்களை பேச வேண்டும் என்று திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திரைத்துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் என்றைக்குமே வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்தது கிடையாது.

அதேசமயம் தொடர்ந்து சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூற வேண்டும் பணம் சம்பாதிப்பது மட்டுமே சினிமாவில் நமது வேலை இல்லை என்று உழைக்கும் சில நடிகர்களும் இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒருவராக தான் வெற்றிமாறன் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கிறார்.

நீங்கதான் என்னை காப்பாத்தணும்

தொடர்ந்து வெற்றிமாறன் ஒவ்வொரு கதையை படமாக்கும் பொழுதும் அதில் ஒரு அரசியலை மக்கள் மத்தியில் கடத்துகிறார். அந்த வகையில் ஒரு வரவேற்பை பெற்ற இயக்குனராக வெற்றிமாறன் மாறி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.

#image_title

ஏனெனில் காலம் காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்களைதான் பார்ப்பார்கள் அதனால் தான் அந்த மாதிரி படங்களை எடுக்கிறோம் என்று கமர்சியல் இயக்குனர்கள் கூறிவந்த நிலையில் அப்படியெல்லாம் கிடையாது என்று நல்ல படமாக இருந்தால் எதை வேண்டுமானாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் பலமுறை நிரூபித்திருக்கின்றனர்.

நடு இரவில் வெற்றிமாறன்

அதில் வெற்றிமாறன் படங்களை ஹிட் கொடுத்தும் ஒரு வகையில் நிரூபித்து இருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றிமாறனுடன் தனக்கு நடந்த அனுபவம் குறித்து நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நான் முதன் முதலில் கன்னிமாடம் என்கிற ஒரு திரைப்படத்தை எடுத்தேன். அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது அதற்கு பிறகு தான் சார் என்கிற விமல் நடிக்கும் இந்த திரைப்படத்தை இப்பொழுது இயக்கி உள்ளேன்.

அப்படி என்ன நடந்தது?

இந்த திரைப்படத்தை இயக்கிய பிறகு இந்த படமும் கன்னிமாடம் திரைப்படம் போலவே யாரும் கண்டுகொள்ளாமல் போய்விடக்கூடாது என்று நினைத்தேன். எனவே நான் வெற்றிமாறன் சாரை இரவு 12 மணிக்கு மேல் போய் சந்தித்தேன்.

#image_title

சந்தித்து இந்த மாதிரி கன்னிமாடம் என்று ஒரு பாடம் எடுத்தேன் அது ஓடாமல் போய்விட்டது இந்த படமும் அப்படி போய்விடக் கூடாது என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் இந்த திரைப்படத்தை வெளியிட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உடனே வெற்றிமாறன் நான் உங்களுடைய கன்னிமாடம் படத்தை பார்க்கிறேன். நீங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் என்னுடைய பாணியில் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறினார். பிறகு அந்த திரைப்படத்தை பார்த்த வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

உங்கள் திரைப்படத்தை நானே வெளியிட்டு கொடுக்கிறேன் என்று உதவி செய்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த நிகழ்வை போஸ் வெங்கட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam