பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்.

தினமும் பப்பாளி பழத்தை நாம் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது இனிப்பானது. எல்லோரும் தெரிந்ததே சத்துக்கள் மிகுதியாக உள்ள அற்புதமான பழம். இப்பழம் மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும் சில சமயம் பச்சை  நிறத்திலும் இப்பழம் கிடைக்கிறது. 

இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இதனை உண்பதால் பல் சம்மந்தமான குறை பாடு தீரும். சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் போதும். 

நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை கூட்டவும் இந்த பப்பாளி பழத்தை தினமும் நீங்கள் சாப்பிட வேண்டும். இன்று பெண்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் மாதவிடாய் பிரச்சினை மற்றும் உதிர போக்கு சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். 

அடிக்கடி பப்பாளி பழத்தை உணவில் சேர்த்து வருவது அவர்களுக்கு எவ்வித நோயும் ஏற்படாது எந்த வகையான தொற்று நோய் பரவினாலும் அது இவர்களை தாக்காது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவு தரக்கூடிய சக்தி இந்த பழத்திற்கு உண்டு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. 

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

 

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது மிகச் சரியான வழி. அடிவயிற்று பிரச்சனைகளை பப்பாளி மிக சீக்கிரத்தில் சரிசெய்யும். வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளியில் உள்ளது. 

பப்பாளி பழத்தின் விலை குறைவு.அதனால் அது தரும் பலன்கள் ஏராளம். பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

இயற்கையான கர்பத்தடையை தூண்டும் ஆற்றல் கொண்டது. உடல் உறவுக்கு பின் இப்பழத்தை சாப்பிட கர்ப்பம் தரிக்காது. ஏழைகளின் ஆப்பிள் பழம் என்று அழைக்கப்படும் இந்த பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்த்து அனைத்து வகையான சத்துக்களையும் எளிதில் பெறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …