பெண்கள் சமையலில் செய்யக்கூடாதவை.

சமையல் என்பது மிகவும் அற்புதமான ஒரு கலை ஆகும். பலரின் பசியை போக்குவதோடு ஆரோக்கியமாக பல்ஆண்டு நோய் நொடி இல்லாமல் வாழ பக்குவமான சமையல் தேவை. 

 

சமையலில் என்ன செய்யக்கூடாத விஷயம்:

ரசம் வைக்கும் போது ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. ரசம் நுரை கட்டிய உடனேயே நான் அதை நிறுத்தி விட வேண்டும். அப்போது தான்  ரசம் சுவையாகவும் அதில் கலந்துள்ள மிளகு, சீரக கரைசலின் சத்து முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கும். 

காபிக்கு பால் காய வைக்கும் போது பாலை அதிகம் காய விடக்கூடாது. இளம் காய்ச்சலே காப்பி போட்டு குடிப்பது மிகவும் நன்றாக இருக்கும். 

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. அப்படி மூடினால் பச்சை வாசம் ஏற்படும். எனவே பச்சை வாசம் நீங்கும் வரை மோர் குழம்பை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். பச்சை வாசம் நீங்கிய பின் மூடிவிடலாம். 

பொதுவாக எந்த வகையான கீரைகளையும் சமைக்கும் போது மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.மேலும் உப்பினை சிறிதளவு தான் போட வேண்டும். ஏன் எனில் கீரை இலையில் இயற்கையாகவே நிறைய உப்புகள் இருக்கும். அது மட்டுமல்ல கீரை வேகும் போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைத்தால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே சுவையாகவும் ருசியாகவும் இருக்கும். 

எந்த காய்கறிகளையும் கழுவிய பின் தான் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவக்கூடாது. காய்களை மிகவும் பொடியாக நறுக்கக்கூடாது. 

சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழியக்கூடாது. அதே போல் சூடாக இருக்கும்போது ரசம் மற்றும் குழம்பில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து ஊற்றக்கூடாது. 

சமையலில் தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக போட்டு வதக்க கூடாது. வெங்காயம் வதங்கிய பின்பு தான் தக்காளியை போட்டு வதக்க வேண்டும். 

பிரிட்ஜில் வாழைப்பழம், வாழைத்தண்டு, உருளைக்கிழங்கை, கீரைகள்  போன்றவற்றை வைத்து சமைக்க கூடாது. 

பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது. மிதமாக காய்ந்த இருந்தாலே போதுமானது. 

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது. இரண்டு கொதிகளில் நிறுத்திவிட வேண்டும். 

குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. அடுப்பை ஆப் செய்துவிட்டு தான் கொத்தமல்லி இலைகளை போட வேண்டும். 

கொத்த மல்லியை பிரிட்ஜில் வைக்கும் போது மஸ்லின் துணியால் சுற்றி வைத்தால் அதன் நிறம் மாறாமல் பச்சை பசேலென்று இருக்கும். 

மேலே சொன்ன இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி வந்தால் சமையலில் நீங்கள் மிகச்சிறந்த எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …