சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் இவர் நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் .அ
தன் பிறகு வாணி ராணி, இளவரசி, கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக திகழ்கிறார்.
அசோக் சிந்தாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி தற்பொழுது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார். தன்னுடைய கர்ப்பத்தை பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியுலகத்திற்கு அறிவித்தார் ஸ்ரீதேவி.
அதனைத் தொடர்ந்து கர்ப்ப காலத்தில் நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட்டுகள் போலவே வழக்கமான சில கர்ப்பகால போட்டோஷூட் களை நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் ஸ்ரீதேவி.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் பீஸ்ட் படத்தின் ஒரு பாடலுக்கு நடுரோட்டில் அப்படி இப்படி ஆட்டம் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.