அவ்வளவு அக்கறைனா அந்த வேலை பார்க்கலாம்.. இயக்குனர் மோகன் ஜியை வச்சு செய்த நீதிமன்றம்..!

பிரபலங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவது என்பது தற்சமயம் அதிகரித்து வருகிறது. அதில் சினிமா பிரபலங்கள் கூறும் விஷயங்கள் என்பது பொதுவாகவே மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை அடுத்து இப்பொழுது எல்லாம் சினிமா பிரபலங்கள் பேசும் பொழுது அதற்கு எதிரான வாதங்களும் அதிகமாக கிளம்பி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான விஷயங்களை கூறியதன் காரணமாக அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

அந்த வேலை பார்க்கலாம்

தமிழில் ருத்ரதாண்டவம், திரௌபதி மாதிரியான ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் அடிக்கடி சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அப்படியாக சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான செய்திகளை பரப்பியதற்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் காரணமாக அதிகமாக பேசப்பட்டு வந்தார் மோகன் ஜி. இந்த நிலையில் மோகன் ஜிக்கு சில விதிமுறைகளின் அடிப்படையில் ஜாமின் வழங்கி இருக்கிறது மதுரை உயர்நீதி மன்ற கிளை

இயக்குனர் மோகன் ஜி

அந்த விதிமுறைகளின்படி தமிழகம் முழுவதிலும் வெளியாகும் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு அதை விளம்பரமாக மோகன் ஜி வெளியிட வேண்டும். உண்மையிலேயே அவருக்கு பழனி கோவிலின் மீது அக்கறை இருக்கிறது என்றால் பழனி கோவிலுக்கு சென்று தூய்மை பணி வேலைகளை செய்யலாம்.

அல்லது பஞ்சாமிர்தம் செய்யும் இடத்தில் பத்து நாட்கள் வேலை பார்க்கலாம் என்று அவரிடம் அறிவுரை கூறியிருக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான கருத்தை கூறியதற்காக சமூக வலைதளங்களிலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வச்சு செய்த நீதிமன்றம்

எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன்பு அதை உறுதிப்படுத்தாமல் கூறக்கூடாது என்று வார்னிங் கொடுத்து மோகன் ஜிக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த மாதிரியான தவறான கருத்துக்களை கூறுவது உண்டு.

ஆனால் இதுவரை மோகன் ஜிக்கு கொடுத்த எச்சரிக்கை அளவிற்கு வேறு பிரபலங்களுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. எனவே இதற்குப் பின்னால் ஏதாவது அரசியல் இருக்குமா என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தாலும் கூட ஆன்மீக ரீதியான கருத்துக்களை யார் பேசினாலும் அது பெரிய சர்ச்சையாகவும் என்பதற்கு ஒரு உதாரணமாக மோகன் ஜிக்கு நடந்த இந்த சம்பவம் அமைந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam