யாருக்கும் தெரியாமல் பல வருஷம் மறைத்த ரகசியம்!.. இப்ப ஓபனா சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலில் ஒவ்வொரு நடிகைகளும் தங்களது நடிப்புத் திறனை மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் தங்கமயில் என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பதோடு அந்த கேரக்டரை செய்த நடிகை சரண்யா துரோடி தனது பல நாள் ரகசியத்தை தற்போது சொல்லியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாமல் பல வருஷம் மறைத்த ரகசியம்..

விஜய் டிவியை பொறுத்தவரை இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முன் அணியில் உள்ளது என்று சொல்லலாம். மக்களின் பெருத்த ஆதரவை பெற்ற இந்த சீரியல் முதல் பாகத்தை முடித்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பகுதியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த சீரியலில் தங்கமயில் கேரக்டரை பார்த்த யாருமே அவரை திட்டாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவு இந்த கேரக்டரோடு ஒன்றிப்போய் இந்த சீரியலை பார்த்து வரும் ரசிகர்கள் தங்கமயில் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத அளவு அவருடைய நடிப்பில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த கேரக்டர் ரவுடி போல அறிமுகம் செய்யப்பட்ட போதும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று அந்த வீட்டுக்குள் குழப்பம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாண்டியனின் ஆசையால் தங்கமயில் குடும்பத்தினர் அடுத்தடுத்து ஏமாற்றங்களை தந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவர்களது உண்மை நிலை எப்போது உடையும் என்று ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருப்பதால் ரசிகர்கள் விரும்பும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கேரக்டரை செய்து வரும் சரண்யா துரோடி தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்து அண்மை பேட்டி ஒன்றில் மிகவும் நேர்த்தியான முறையில் பேசி இருக்கிறார்.

இப்ப ஓபனா சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

இந்நிலையில் சமீபத்தில் வரலட்சுமி பூஜையின் போது சரண்யா தன்னுடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு அந்த பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்தது. அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தான் அனைவருக்கும் இவருக்கு கல்யாணம் ஆனதே தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கும் தங்கமயில் சரண்யா அவர் வெளியிட்டு இருந்த புகைப்படம் பற்றி கூறியிருந்தார்.

இதில் இவரும் இவரது கணவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதை அடுத்து திருமணம் செய்து கொண்டு இருப்பதாகவும் ஆனால் அந்த திருமண செய்தியை வெளியே சொல்லாமல் இருந்ததற்கு பர்சனல் வாழ்க்கை எதையும் வெளியே சொல்ல வேண்டாம் என்று நினைத்தது தான் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டதை அடுத்து பலருக்கும் நான் கல்யாணம் செய்து கொண்டவள் என்ற செய்தி தெரிந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பே நான் என் கணவரோடு அடிக்கடி புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறேன் இது குறித்து பலருக்கு அப்போதே சந்தேகமும் இருந்தது.

இதனால்தான் பலரும் தன்னிடம் திருமணம் ஆகி விட்டதா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்டு வந்தார்கள். அதற்கு நான் ஆமாம் என்று எப்போதும் சொன்னது கிடையாது.அது போல இல்லை என்றும் சொன்னது கிடையாது.

இதற்கு காரணம் என்னுடைய பர்சனல் வாழ்க்கை பர்சனல் ஆக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். இப்போது அது அனைவருக்கும் தெரிந்து விட்டது. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என்னுடைய கணவர் தான் காரணம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்.

மேலும் யாருக்கும் தெரியாமல் பல வருஷம் மறைத்து வைத்திருந்த இந்த ரகசியம் குறித்து தற்போது ஓப்பனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கூறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam