விஜய் அஜித்தை மிரள விட்ட நடிகர் பிரசாந்த்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

இப்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அதிக வரவேற்பு பெற்ற நடிகர்களாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாக இருப்பதால் ரசிகர்களும் தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விஜய் அஜித் பிரபலமாக துவங்கிய காலகட்டங்களில் அவர்களுக்கு நிறைய நடிகர்கள் போட்டியாக வந்து நின்றனர். அதுவும் மிகக்குறுகிய காலகட்டத்திலேயே அதிக வரவேற்பை பெற்ற நடிகர்கள் சிலர் உண்டு அப்படியான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் பிரசாந்த்.

மிரள விட்ட நடிகர்

நடிகர் பிரசாந்த் பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. 12ஆம் வகுப்பை முடித்த உடனே திரைத்துறையில் அறிமுகமானார் பிரசாந்த். அவ்வளவு இளம் வயதில் வந்தாலும் கூட வந்த உடனேயே விஜய் அஜித் இருவரையும் ஓரங்கட்டி தனக்கென தனி ரசிக்கப்பட்டாளத்தை பெற்றார் நடிகர் பிரசாந்த்.

நடிகர் பிரசாந்த் முதன்முதலாக நடித்த திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம். இந்த திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது. முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை இவர் கொடுத்ததை பார்த்து திரைத்துறையே ஆச்சரியப்பட்டு போனது.

நடிகர் பிரசாந்த்

அதற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கதைகளும் சிறப்பான கதைகளாகவே இருந்து வந்தன. அதற்குப் பிறகு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பிரசாந்த் .

அந்த திரைப்படம் ஒன்றே அவருக்கு தேசிய விருதையும் பெற்று கொடுத்தது இது யாருமே எதிர்பார்க்காத விஷயமாக இருந்தது. தொடர்ந்து அடுத்து நடிகர் பிரசாந்த் நடித்த திரைப்படம் செம்பருத்தி. இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் மூன்றாவது திரைப்படமான செம்பருத்தி அவருக்கு முன்பு வெளியான படங்களை விடவும் பெரும் வெற்றியை அவருக்கு பெற்று கொடுத்தது.

யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க

அதற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பிரியாத வரம் வேண்டும் போன்ற அனைத்து திரைப்படங்களுமே அவருக்கு பயங்கரமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது.

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு ஓரிரு படங்கள் தோல்வியை கொடுத்தது அந்த சமயத்தில் விஜய்யும் அஜித்தும் ஆக்ஷன் கதாநாயகர்களாக மாற துவங்கி இருந்தனர். ஆனால் நடிகர் பிரசாந்த் மட்டும் தொடர்ந்து குடும்ப நடிகராகவே நடித்து வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் பின்னடைவை அடைய தொடங்கினார்.

பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்த பிரசாந்த் தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு வந்து விட்டார் என்றாலும் கூட அவர் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவர்தான் அனைவரையும் விட பெரிய நடிகராக இருந்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam