நீயெல்லாம் எப்படி ஜெயிச்ச?.. பாக்கியராஜ் பேச்சால் ஷாக்கான இளையராஜா..!

தமிழில் புகழ்பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி விஜய் அஜித் காலக்கட்டம் வரையிலுமே தொடர்ந்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசனிடம் இருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர் சிவாஜி. கதாநாயகனாக மட்டும்தான் அவரால் நன்றாக நடிக்க முடியும் என்று கிடையாது.

நீயெல்லாம் எப்படி ஜெயிச்ச

ஒரு தந்தை கதாபாத்திரமாக இருந்தாலும் அண்ணன் கதாபாத்திரமாக இருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் சிவாஜி கணேசன். அதனால்தான் சினிமா வளர்ச்சி பெற்ற பிறகும் கூடவாஜி கணேசனுக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் வளர்ச்சி பெற்ற சினிமாவோடு சேர்ந்து அப்டேட் ஆவது என்பது சிவாஜி கணேசனுக்கு சிரமமான விஷயமாக இருந்தது. ஏனெனில் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து நடிப்பை கற்றுக் கொண்டவர் சிவாஜி கணேசன்.

ஆனால் கலர் சினிமாக்கள் வந்த பிறகு சினிமாவில் நிறைய முன்னேற்றங்கள் நடந்தது. முக்கியமாக டப்பிங் தொழில்நுட்பத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தது. அது எல்லாமே சிவாஜிக்கு மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்தது.

கடுப்பான சிவாஜி:

இயக்குனர் பாக்கியராஜ் இதுக்குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது பாரதிராஜா முதல் மரியாதை திரைப்படத்தை இயக்கும்பொழுது அவருடன் நடிப்பதற்கு சிவாஜி கணேசன் மிகவும் கஷ்டப்பட்டார்.

சம்பந்தமில்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருப்பார் பாரதிராஜா. இப்படித்தான் ஒருமுறை சூரியன் மறையும் நேரத்தில் எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி ஒன்று படமாகப்பட்டது. அந்த காட்சியை எதற்கு படமாக்குகிறோம் என்று சிவாஜியிடம் கூறவில்லை பாரதி ராஜா.

ஷாக்கான இளையராஜா

இந்த நிலையில் எதற்கு ஏன் இப்படி ஒரு காட்சியை எடுக்கிறாய் என்று கேட்டிருக்கிறார் சிவாஜி. அதற்கு பதில் அளித்த பாரதிராஜா சார் சூரியன் மறைவதற்குள் அந்த காட்சியை எடுத்தாகணும் சார் நல்லா இருக்கும் வாங்க என்று கூறினாரே தவிர எதற்காக அந்த காட்சியை எடுக்கிறோம் என்று கூறவே இல்லை.

அதனால் கடுப்பான சிவாஜிகணேசன் பிறகு அவரது உதவியாளரை அழைத்து இவனுடைய உதவி இயக்குனர் பாக்கியராஜ் வசனம் மட்டும் தான் சொல்ல மாட்டான். இவன் என்ன காட்சி என்று கூட கூற மாட்டிங்கிறான். எப்படித்தான் இத்தனை படம் வெற்றி பெற்றான் என்று தெரியவில்லை என்று திட்டி இருக்கிறார்.

ஆனால் பிறகு படம் வெளியாகும் பொழுது பாடல்களில் சில சில இடங்களில் அந்த காட்சிகளை பாரதிராஜா பயன்படுத்தி இருப்பதை பார்த்திருந்தார் சிவாஜி. பிறகு சிவாஜி இதுக்குறித்து கூறும் பொழுது சினிமா எவ்வளவு முன்னேறி இருக்கின்றது என்பதை பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

நான் சும்மா நடித்த பல காட்சிகள் அந்த காட்சிகளுக்காகவே நடித்தது போன்று அமைந்திருக்கின்றன என்று கூறினார். என்று சிவாஜி கூறியதாக அந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார் பாக்யராஜ் இந்த விஷயத்தை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த இளையராஜா வியந்து சிரித்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam