அட்ரா சக்க.. போடுற வெடிய.. விரைவில் எதிர்நீச்சல் 2 !!.. ஆனா பிரபலத்தின் பதிவால் சோகத்தில் ரசிகர்கள்!..

சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இந்த சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் படையை இருந்தது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்கியதோடு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அட்ரா சக்க.. போடுற வெடிய.. விரைவில் எதிர்நீச்சல் 2..

அந்த வகையில் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பான இந்தத் தொடர் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு டிஆர்பி ரேட்டிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டது.

டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொண்ட இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது எனினும் இந்த தொடர் முடிவதற்கு முன்பே அவர் இந்த உலகை விட்டு பிரிந்ததை அடுத்து கதை கொஞ்சம் சொதப்ப ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்தத் தொடர் சரியாக மக்கள் மத்தியில் ரீச் ஆகாததை அடுத்து திடீரென 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இதனை அடுத்து தற்போது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய வகையில் விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் போடுடா வெடிய என்று சொல்லக்கூடிய அளவு உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தத் தொடரை முடிந்த பிறகு அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அவர்களுக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.

ஆம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது சீசன் மிக விரைவில் வெளிவரப் போகிறது என்ற தகவல் தற்போது இணையம் எங்கும் பரவி வருகிறது. ஆனால் அதில் சோகமான ஒரு விஷயமும் உள்ளது.

ஆனா பிரபலத்தின் பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..

இந்தத் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மதுமிதா பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாக நினைவில் இருக்கும். அவர் கண்டிப்பாக இந்த எதிர்நீச்சல் பகுதி இரண்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு விஷயத்தை ஆரம்பித்ததாக தெரிவித்த பதிவை போட்டிருக்கும் இவர் இந்த தொடரில் நடிக்க மாட்டார் என்ற விஷயத்தை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது பகுதி வருவது அவருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் மதுமிதா நடிக்காமல் போகக்கூடிய சூழ்நிலை இருப்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. அத்தோடு தொடர் எப்போது ஒளிபரப்பாகும் அதை காண வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam