டாப் ஹீரோ படத்தை பின்னுக்கு தள்ளி.. வசூலில் அடித்து தூக்கிய ரப்பர் பந்து!!.. 13 நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன்..

தமிழ் திரையுலக வரலாற்றில் வித்தியாசமான கதை அம்சத்தோடு வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த பாராட்டை பெற்றிருக்கும் படங்களில் ஒன்றான ரப்பர் பந்து பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த திரைப்படத்தில் கிராமத்துக் காதலை மையப்படுத்தி அத்தோடு ரப்பர் பந்தினை கொண்டு கிரிக்கெட் விளையாடும் பழக்கத்தை இன்னும் தொடர்ந்து வரும் கிராமப்புற இளைஞர்கள் இடையே நடக்கின்ற ஒரு அற்புதமான விஷயத்தை படமாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

டாப் ஹீரோ படத்தை பின்னுக்கு தள்ளி..

அந்த வகையில் இந்த ரப்பர் பந்து படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிக்க அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து தங்களது அபார திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருப்பதோடு ஷான் ரோல்டன் படத்திற்கான அற்புதமான இசையை தந்திருக்கிறார்.

கிராமப்புறத்தில் விளையாடப்படும் கிரிக்கெட்டை மையப்படுத்தி காதல், ஈகோ, நட்பு, சாதிய மனநிலை என அனைத்தையும் தக்க விகிதத்தில் கலந்து அழகாக இந்த படத்தை தந்திருக்கும் இயக்குனர் தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் ஜூனியர் என்டிஆரின் தேவரா படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரப்பர் பந்து தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கிட்ட தந்த வண்ணம் உள்ளது.

 13 நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன்..

அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டில் எப்படி சிக்சர்களை அடித்து நொறுக்குவார்களோ அது போல 13 நாட்கள் கடந்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் டாப் நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி இன்னும் ஏராளமான ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இந்த படம் இருப்பதால் இதுவரை இந்த படம் செய்திருக்கும் வசூல் என்ன என்ற ரீதியில் பலரும் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த 13 நாட்களில் உலக அளவில் ரப்பர் பந்து திரைப்படம் சுமார் 23 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக கருதப்படுகின்ற வேளையில் இனி வரும் நாட்களில் இந்த அளவுக்கு வசூல் கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எனினும் இந்த படம் ஒரு மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 23 கோடியை வெறும் 13 நாட்களில் பெற்றுள்ளதை அடுத்து பட குழு மிகுந்த மகிழ்ச்சிகள் உள்ளது என்று சொல்லலாம்.

அத்தோடு ரஜினி நடிப்பில் வெளிவரக்கூடிய வேட்டையன் படம் திரையரங்குகளுக்கு வரும் வரை இந்த படம் இது போல தொடர்ந்து ஓடினால் இன்னும் ஒரு மிகப்பெரிய கலெக்ஷனை எடுக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam