யானை வரும் முன்னே மணியோசை வரும் என்று சொல்லுவார்கள். அது போல தலைவர் படம் என்றாலே இன்றும் மட்டுமல்ல என்றுமே தனி மவுஸ்தான் இருக்கும். அந்த வகையில் வேட்டையன் படம் பற்றி ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் படமாக வேட்டையன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் சுமார் 160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளது.
தலைவருனா சும்மாவா..
தமிழ் சினிமாவை பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த்தை தான் குறிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் ஸ்டைலை விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை இன்று வரை நிலையாகக் கொண்டிருப்பவர்.
70 வயதை கடந்து விட்ட நிலையிலும் இன்னும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் மாஸ் ஹீரோவாக அனைவரையும் தெறிக்க விடக்கூடிய இவரின் வேட்டையன் படத்தை டிஜே ஞானவேல் இயக்க இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர உள்ளது.
தலைவர் படம்னா சும்மாவா என்று சொல்லக்கூடிய வகையில் இந்த படத்தில் ரஜினியோடு அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார் என ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளதை அடுத்து படம் குறித்த எதிர்பார்ப்பு எதிரி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் சிறப்பே ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து நடித்திருப்பது தான் என்று பேசப்படுகிறது. இதற்குக் காரணம் இவர்கள் இருவரும் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பதால் முதல் முறையாக அமிதாப்பச்சன் நேரடியாக தமிழ் படத்தில் இவரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
வேட்டையன் செய்த ப்ரீ புக்கிங் சாதனை.. அதிருது இல்ல..
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் ஆரம்பித்து விட்டது.
இதனை அடுத்து நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் வேட்டையன் படத்தை பார்க்க ப்ரீ புக்கிங்கில் டிக்கெட்டை புக் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளி வந்து ஒரே நாளில் இருந்த இடம் தெரியாமல் போகக்கூடிய சூழ்நிலையில் என்னும் திரையரங்குக்கு எட்டிப் பார்க்காத வேட்டையின் திரைப்படம் ஃப்ரீ புக்கில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது என்று தெரிந்தால் நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
ஆம். அதற்குக் காரணம் இந்த திரைப்படம் இது வரை ப்ரீ புக்கிங் கலெக்ஷனில் மட்டும் சுமார் ₹ 8.2 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளி வந்தால் இதை விட பன் மடங்கு வசூலை வாரி குவிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.
எனவே வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளிவரக்கூடிய வேட்டையன் திரைப்படமானது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று சொல்லலாம்.