சமந்தாவின் நடத்தை பற்றி பெண் அமைச்சர் மோசமான பேச்சு..கதறும் மாமியார் அமலா..!

தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை எழுந்ததை அடுத்து விவாகரத்து பெற்ற விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் இவரது விவாகரத்து குறித்து பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்திருந்த போதும் அண்மையில் இவர்கள் இருவரது விவாகரத்துக்கும் காரணம் கே டி ஆர் தான் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடத்தை பற்றி பெண் அமைச்சர் மோசமான பேச்சு..

விவாகரத்துக்கு பிறகும் நடிகர் நாகார்ஜுனா அமலா ஆகியோர் சமந்தாவை தங்கள் வீட்டு பெண் போல பார்ப்பதாக பல பேட்டிகளில் உணர்வு பூர்வமாக பேசி இருக்கிறார்கள்.

மேலும் விவாகரத்துக்கு பிறகு கடும் மன உளைச்சலில் மட்டுமல்லாமல் மயோ சிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மெல்ல, மெல்ல வெளி வந்து தற்போது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து தெலுங்கானாவின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா பேசும் போது இவர்களது விவாகரத்துக்கு காரணம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கேடி ராமராவ் என்ற பேச்சை பதிவு செய்தார்.

இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவின் என் கன்வென்ஷன் சென்டரை இடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் சமந்தாவை அனுப்பி வைக்க வேண்டும் என்று மறைமுகமாக கேட்டதாகவும் இதனை அடுத்து நாகார்ஜுனா இதை தன் மருமகளிடம் கூற சமந்தா அதற்கு ஒப்புக்கொள்ளாததால் கோபம் கொண்ட நாகார்ஜுன் தன் மகனிடம் இதைக் கூற விவாகரத்து நடந்தது என்ற விஷயத்தை செய்தியாளர்களின் முன்பு தெறிக்க விட்டார்.

இதனை அடுத்து தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நடிகை சோபிதாவை தீர்மானம் செய்துள்ளதாக இவரின் இந்த செயலால் சினிமாவில் இருக்கக்கூடிய பலரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

கதறும் மாமியார் அமலா..

மேலும் பல நடிகர்களை போதைக்கு அடிமையாக மாற்றி இருக்கக்கூடிய நபர் தான் நாக சைதன்யாவின் அப்பா என்ற தகவலை கூறியதை அடுத்து இந்த விஷயம் காற்று தீ போல் பரவியதை தொடர்ந்து சமந்தாவின் முன்னால் மாமியார் இதை உண்மை இல்லை என்று சொல்லி கதறி இருக்கிறார்.

இதனை அடுத்து பலரது கண்டனங்களுக்கு உள்ளான இந்த விஷயமானது தற்போது பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பெண் அமைச்சர் இது போன்ற பொய்யான கருத்துக்களை வெளியிடுவது தவறு என்று நாகார்ஜுனா கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகைகளின் சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவதும் தவறு என்று அமைச்சரை கடுமையாக சாடிய நாகசைதன்யாவும் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் தனது விவாகரத்து பரஸ்பரமாக எடுத்த முடிவு இதில் எந்த அரசியல் சதியோ நீங்கள் யூகிப்பது போல வேறு எந்த ஒரு நிகழ்வோ நடக்கவில்லை என்று ஓபனாக நடிகை சமந்தாவும் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் நடத்தை பற்றி பெண் அமைச்சர் மோசமாக பேசிய பேச்சினை தொடர்ந்து விவாகரத்து பெற்ற சமந்தாவுக்கு ஆதரவாக அவரது மாமியார் மற்றும் அவரது மாமனார் முன்னாள் கணவர் அனைவரும் அமைச்சரின் பேச்சுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது அந்த அமைச்சர் வலுத்து வரும் கண்டனங்களை அடுத்து தன்னுடைய பேச்சுக்கும் கருதுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தான் பேசிய கருத்துக்கள் அனைத்தையும் எந்தவித நிபந்தனையும் இன்றி வாபஸ் பெறுவதாக சொல்லி அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam