இப்ப நெனச்சாலும்.. அத ஏண்டா செஞ்சோம்னு வருத்தப்பட்டேன்.. ஓபனா சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!

பொதுவாக திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்ட சீரியல்கள் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை ரசிகர்களை கவரக்கூடிய வகையில் சீரியல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இப்ப நெனச்சாலும்..

அந்த வரிசையில் சன் டிவிக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் தினம் தினம் காத்திருப்பதோடு இல்லத்தரசிகளோடு இளைஞர்களையும் கட்டிப்போட்ட தொடர்களில் ஒன்றாகவும் டிஆர்பிஐ தக்க வைத்துக் கொள்ளும் தொடராகவும் என்ற தொடர் விளங்குகிறது.

அந்த வகையில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை அடுத்து முதல் சீசன் முடிந்த கையோடு அடுத்த இரண்டாவது சீசன் துவங்கப்பட்டு இதில் அப்பா மகனுக்கு இடையே இருக்கக்கூடிய அற்புதமான பந்தத்தை அழகாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் கதை அமைந்துள்ளது.

மேலும் ஆரம்ப காலத்தில் இரண்டாவது சீசனுக்கு போதுமான அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது கதைக்களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என சொல்லலாம்.

அத ஏண்டா செஞ்சோம்னு வருத்தப்பட்டேன்..

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்ற கதாபாத்திரமான தங்கமயில் வேடத்தில் நடித்து வரும் சீரியல் நடிகை சரண்யா துரடி சமீபத்தில் பேட்டி ஒன்று சில விஷயங்களை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் பாண்டியன் ஸ்டோர் சீசன் இரண்டில் நடிக்க எடுத்த முடிவு தான் மிகவும் சரியான முடிவு என்றும் அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் இது மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று பலமுறை யோசித்ததோடு மட்டுமல்லாமல் இதுவரை தன் நடித்த கதாபாத்திரம் முழுவதும் போல்டான கதாபாத்திரம் என்பதால் தங்கமயில் கேரக்டரை எப்படி செய்வது என்று யோசித்த பிறகு தான் சரி என்று சொல்லி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஓபனா சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

இதனை அடுத்து இந்த கேரக்டர் குறித்து பல நெகடிவ் கமெண்ட்கள் வரும் பொழுது என் அப்பாவே என்னிடம் இதில் நடிக்க வேண்டுமா என்று கேட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து முதலில் எனக்கு அந்த கேரக்டரில் நடிக்க வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் நாள் போகட்டும் என்று காத்திருந்தேன்.

அப்படி காத்திருந்ததால் எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது நிலைமை மாறிவிட்டது என்று பொறுப்பாகவும் பொறுமையாகவும் பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam