விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாளை துவங்க உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருக்கிறார்கள்.
நாளை மாலை மிகவும் பிரம்மாண்டமான துவக்க விழாவோடு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதை அடுத்து சமூக வலைதளங்கள் முழுவதும் இது பற்றிய பேச்சுக்கள் ஆக்கிரமித்துள்ளது.
வனிதா விஜயகுமார் ரீவ்யூ..
இந்நிலையில் இந்த சீசனில் பிரபல காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதால் போட்டிகளில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
அது மட்டுமா? பிக் பாஸ் சீசன் 7 வரை உலகநாயகன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்க இருப்பது எப்படி என்பதை பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் ஆவலாக உள்ளது.
அதிலும் ஆளும் புதிது, ஆட்டமும் புதிது என்று கம்பீரமாக பேசி வரக்கூடிய நிலையில் ரசிகர்களின் ஆவலை எகிர வைத்திருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் சேதுபதி பண்ணற விஷயம்..
இதனை அடுத்து விஜய் டிவி பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கான புரோமோ அடுத்தடுத்து வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் இவர் ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து தனது புதிய பிரமோவை வெளியிட்டு அனைவரையும் கதி கலங்க வைத்து விட்டார். மேலும் இந்த புரோமோ இணையவாசிகளின் மத்தியில் வைரலானது.
இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாள் முடிவிலும் அதன் ரிவ்யூவை வனிதா விஜயகுமார் கூற உள்ளதாக சொல்லி இருப்பதோடு இந்த ரிவ்யூவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பார்த்த பிறகு தான் தூங்க போவார் என்ற விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரோடு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து விஜய் சேதுபதி குறித்து சொன்ன விஷயம் அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்து அதன் விமர்சனத்தை வனிதா எப்படி பதிவு இருக்கிறார். அவரது அதிரடி மொமன்ட்டுகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போதைய கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.