ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்.. பிரபல வாரிசு நடிகர் ஹம்சவர்த்தனுக்கு விபத்து..

ஷுட்டிங் ஸ்பாட்டில் விபத்து நடப்பது என்பது புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் தற்போது பிரபல வாரிசு நடிகர் ஹம்சவர்தன் புதிதாக நடித்து வரும் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து ஹம்சவர்த்தனின் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு எண்ணானதோ, ஏதானதோ என்று அறிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். அது பற்றிய பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்..

புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன், பிறகு உள்ளிட்ட படங்களில் ஹீரோ வேடத்தை ஏற்று நடித்த நடிகர் ஹம்சவர்தன் தற்போது புதிதாக நடிக்கும் படம் தான் மகேஸ்வரா.

இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரெட் டிராகன் என்டர்டைன்மெண்ட் பேனரில் ஹம்சவர்தன் தயாரித்து வருகிறார்.

மேலும் இப்படத்தை மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஹரா படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தான் உயர்தர சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தடைமட்டமாக்கும் பரபரப்பான சண்டை காட்சி எடுத்து வந்த அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்புராயன் தலைமையில் படமாக்கும் போது சற்றும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

பிரபல வாரிசு நடிகர் ஹம்சவர்த்தனுக்கு விபத்து..

அந்த சமயத்தில் சிறு காயத்தோடு ஹம்சவர்தன் உள்ளிட்டோர் உயிர் தப்பினார்கள். இதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக முறுக்கி விடப்பட்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்தப் படத்தில் ராம்கி, கே ஜி எஃப் புகழ் கருடா ராம், பி எல் தேனப்பன் வேல ராமமூர்த்தி உள்ளிட்டோ முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் அடுத்தடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் கலந்த அதிரடி கமர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த மகேஸ்வரா திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நடக்க உள்ளது.

இந்தப் படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகள் முருகன் கவனித்துக் கொள்ள இது வரை ஏற்றிராத மாறுபட்ட வேடத்தில் ஹம்சவர்தன் நடிக்க இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை காணும் ஆவலில் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இந்த படம் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விபத்து குறித்து இணையம் முழுவதும் விஷயங்கள் கசிந்து வருவதோடு அவரது ரசிகர்கள் அனைவரும் இது குறித்த விஷயத்தை அறிந்து கொள்ள கவலையோடு காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam