நான் நடித்த ஒரு பிட்டு சீனை பார்த்த பிறகு தான் தமிழ் இயக்குனர் ஒருவர் எனக்கு அடையாளமாக திகழ்ந்த ஒரு கதாபாத்திரத்தை மிகப்பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.
அது என்ன பிட்டுக்காட்சி..? அந்த இயக்குனர் யார்..? அது என்ன படம்..? அது என்ன கதாபாத்திரம்..? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையால் தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்கள் சினிமா தயாரிப்பு மாடலிங் விளம்பரத்துறை என பல துறைகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறார்.
தன்னுடைய கைதேர்ந்த சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ரம்யா கிருஷ்ணன்.
தற்போதும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவருடன் அறிமுகமான நடிகைகள் இவருக்கு பின் அறிமுகமான நடிகைகள் கூட தற்போது ஆள் எங்கே இருக்கிறார்கள் என்று காணாமல் போய்விட்ட நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து 40 ஆண்டு காலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறார்.
இதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் சினிமா மீது வைத்திருக்கும் அற்பணிப்புதான் என்பதை ஆணித்தரமாக கூற முடியும். ஏனென்றால், இயக்குனர் தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் பிட்டு படங்களில் நடிக்கக்கூடிய நடிகையாக நடித்திருப்பார்.
அந்த படத்தில் தன்னுடைய மகனே தன்னை போடி தே*** என்று அழைக்கக்கூடிய ஒரு காட்சி இருந்தும் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியை அவ்வளவு தத்ரூபமாக நடித்துக் கொடுத்திருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இன்னும் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடிக்க இருந்தது நடிகை நதியா தான். ஆனால் இப்படியான காட்சிகள் என்னால் நடிக்க முடியாது என்று அந்த படத்தில் இருந்து விலகினார்.
ஆனால், நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் ஒரு நடிகை சினிமாவிற்கு என்ன தேவை.. கதைக்கு என்ன தேவை.. இயக்குனருக்கு என்ன தேவை.. என்பதை தெரிந்து கொண்டு ஒரு நடிகையாக நான் அதனை செய்து கொடுப்பது சவாலாக நினைக்கிறேன்.
இது என்னுடைய தொழில் என அப்படியான காட்சியிலும் நடித்து காட்டினார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்கும் அந்த அற்பணிப்புதான் தான் 40 ஆண்டு காலமாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிற்க வைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரம்யா கிருஷ்ணனிடம் படையப்பா படத்தில் நீங்கள் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம். அதற்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள்..? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை ரம்யா கிருஷ்ணன், என்னை எதற்காக அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள் என்று கேட்டால் அந்த கதையில் பணியாற்றிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், நானே ஒரு முறை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் சொன்ன பதில் என்னவென்றால், நான் 1993 ஆம் ஆண்டு நான் நடித்த ஆயனாகி இட்டாரு என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக நான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அப்போது ஒரு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நான் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா..? எதிர்மறையான தோற்றத்தை என் மீது பதிய வைக்கக்கூடிய இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டுமா..? என முதலில் தயங்கினேன்.
அப்போது ஒரு நடிகையாக சவாலான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடிப்பது நான் சினிமாவுக்கு செய்யக்கூடிய நன்றி கடன் என்று நினைத்து அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன்.
அந்தப் படத்தில் நான் வில்லியாக நடித்திருந்த ஒரு சிறு பிட்டு சீனை மட்டும் தான் பார்த்திருக்கிறார் கே எஸ் ரவிகுமார். அவர் அந்த படத்தை முழுமையாக கூட பார்க்கவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நான் எந்த அளவுக்கு வில்லத்தனமாக நடித்திருக்கிறேன் என்பதை உணர்ந்து நீலாம்பரி கதாபாத்திரம் எனக்கு பொருந்தும் என நினைத்து எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.
நான் 1993 ஆம் ஆண்டு ஆயனாக்கி இட்டாரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்திருந்தால் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்காது.
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என்றால் பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்காது. இதுதான் உண்மை. எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு ஏன் நான் நடிக்கிறேன் என்றால் அதற்கு சினிமாவின் மீது நான் வைத்துள்ள அர்ப்பணிப்பு தான் காரணம்.
சினிமாவின் மீது நான் அர்ப்பணிப்பு வைத்துள்ள காரணத்தினால் சினிமா எனக்கு பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கிறது என உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.