நேற்று மாலை விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் பிக் பாஸ் சீசன் 8 கோலாக்கலமாக ஆரம்பிக்கப்பட்டு அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்த சீசனில் புதிதாக தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கும் விஜய் சேதுபதி தன் முதல் பேச்சிலேயே ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதோடு தன் பாணியில் தனது வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நடிகர் ரஞ்சித்தை ஓரம் காட்டிய விஜய் சேதுபதி..
இந்தப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒருவரையும் மிகவும் ஃப்ரெண்ட்லி முறையில் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்து அனைவரது அசத்தலான பாராட்டுதல்களையும் பெற்றுவிட்டார்.
இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதத்தில் மிகச்சிறந்த முதிர்ச்சி தெரிந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் ஒரு நண்பரை போல் அணுகிய விதம் அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டது.
இந்த நிலையில் முதலாவதாக பேட்மேன் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இவரோடு திரைப்படத்தில் மகளாக இணைந்து நடித்த போட்டியாளரும் அறிமுகம் செய்யப்பட்டார்.
அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக நடிகர் ரஞ்சித் களம் இறங்கி இருக்கிறார். அவர் மற்ற போட்டியாளர்களிடம் சகசமாக பேசிய விஜய் சேதுபதி ரஞ்சித்தை பார்த்து மிகவும் கோபமாக சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் சேதுபதி ரஞ்சித்திடம் நீங்கள் ஒரு படம் இயக்கு இருந்தீர்கள் என்ற கேள்வியை முன் வைத்த போது அவர் அந்த படத்தின் பெயர் கவுண்டம்பாளையம் என்று சொல்லியிருந்தார்.
இதனை அடுத்து சிரித்தபடியே விஜயசேதுபதி அது இல்ல பீஷ்மர் அது மிகச்சிறந்த படம் என்பதை கூறியதோடு கவுண்டம்பாளையம் சர்ச்சை வந்த போது நீங்கள் பேசிய விதம் பற்றி விரிவாக பகிர்ந்தார்.
சர்ச்சை பேச்சு முற்றிய வாக்குவாதம்..
அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் ரஞ்சித் முற்றிலும் வேறொரு ரஞ்சித்தாக தனக்கு தெரிவதாக சொன்னதோடு ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்களில் இயல்பான நண்பனாக நடித்த நீங்கள் இப்படி ஏன் மாறிவிட்டீர்கள். எது உங்களது இயல்பு? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த படங்களைப் பார்த்து நாங்க வேற மாதிரி உங்களை நினைச்சுட்டோமா? என்று விஷமத்தனமாக கேள்விகளை எழுப்ப ரஞ்சித்தை ஓரம் கட்டுவது போல அவரது பேச்சு இருந்தது.
இதனை அடுத்து பிக் பாஸ் மேடை சூடானதோடு அதற்கு பதிலாக ரஞ்சித் பேசும் போது நான் வைத்த விதை ஒன்று முளைத்த செடி எனக்கே அது பத்தி தெரியவில்லை என்று சொன்னதோடு விட்டுவிடாமல் விடாப்பிடியாக இப்போது பாடம் கத்துக்கிட்டீங்க என்று விஜய சேதுபதி கூறினார்.
நாறிய பிக் பாஸ் மேடை
அதற்கு நடிகர் ரஞ்சித்தும் விடாப்பிடியாக நிச்சயமாக கற்றுக் கொண்டேன் என்று சொல்ல விஜய் சேதுபதி உங்க சட்டையில் இருக்கும் பூ உங்கள் மனதிலும் பூக்கட்டும் என மறைமுகமாக தாக்கிப் பேசியதாக ரசிகர்களின் மத்தியில் விமர்சனங்கள் வந்துள்ளது.
மேலும் நடிகர் ரஞ்சித்தை ஓரம் கட்டி பேசியிருக்கும் விஜய் சேதுபதியின் சர்ச்சை பேசால் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிக் பாஸ் மேடை நாறிவிட்டது என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.