பனங் கருப்பட்டி பொங்கல்

கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாகவும், மெருகூட்டவும் உதவுகிறது. பருவமடைந்த நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இது இடுப்பு எலும்புகள், கர்ப்பப் பையை வலுப்பெறச் செய்கிறது. பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டி, உளுந்து சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

இன்று வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது போன்ற பொருட்களால் செய்யக்கூடிய நமக்கு இரும்புச்சத்து எளிதில் கிடைக்கும் எனவே அதனை பயன்படுத்துவது மிகவும் நல்லது அந்த வரிசையில்  பனம் கருப்பட்டியை கொண்டு  பொங்கலை எப்படி செய்யலாம் என்பதை இனி காண்போம்.

தேவையானவை: 

பச்சரிசி – 100 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

பனங்கருப்பட்டி – கால் கிலோ

நெய் – 100 கிராம்

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

வறுத்த முந்திரி

திராட்சை – தலா 25 கிராம்.

செய்முறை: 

பச்சரிசி, பாசிப் பருப்புடன் தேவையான நீர் சேர்த்து குழைய வேகவிடவும். 

கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். 

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசி பருப்பு கலவை, கருப்பட்டி கரைசல் சேர்த்து தளர கிளறி எடுக்கவும்.

நெய் முழுவதையும் காய்ச்சி அதன் மீது ஊற்றி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …