நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பேசி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.
இது வரை சுமார் 7 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் அந்த சீசன்கள் அனைத்தையுமே உலகநாயகன் தொகுத்து வழங்கியதை அடுத்து இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 எப்படி இருக்கும் என்ற சந்தேகங்கள் மக்கள் மனதில் இருந்தது.
பிக் பாஸ் 8 முதல் நாள் எலிமினேஷன்..
இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் சுமார் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விஜயசேதுபதியின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்ட விவரம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இந்த பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு என ஒரு பகுதியும் ஆண்களுக்கென ஒரு பகுதி என பிரித்துக்கொண்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நேரத்தில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி என்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என்று கூறி சென்றார்.
அந்த வரிசையில் முதலாவதாக களம் இறங்கியவர் தயாரிப்பாளர் ரவீந்தர். அதை அடுத்து இரண்டாவதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அந்த நபர் தான் தற்போது எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
அழுகையோடு வெளியேறிய நபர்..
உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று முதல் நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட விஜயசேதுபதியின் ரீல் மகளுக்கு தற்போது நிகழ்ந்திருக்கும் எலிமினேஷன் அவரது மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.
இவர் வளர்ந்து வரும் இளம் நடிகை சாச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமாகி இருக்கிறார். இவர்கள் இதை அடுத்து இந்த எலிமினேஷன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஏகப்பட்ட கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் களம் இறங்கிய இளம் நடிகை தற்போது வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டதை அறிந்து கொண்டு அழுத வண்ணம் வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இவர் வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் களம் இறங்க வாய்ப்புள்ளதால் அதை தக்க முறையில் பயன்படுத்தி தனக்கான பிளாட்பார்மை அமைத்துக் கொள்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.