நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களை செய்து வருகிறார். நடிகர் ரஜினி போல அரசியலுக்கு வராமலும் அரசியல் குறித்த விஷயங்களுக்கு கேள்வி கேட்காமலும் இருப்பவராக விஜய் இருந்து விடுவார் என்பது பலரது எண்ணமாக இருந்தது.
ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி அரசியலுக்கு வந்த தருணத்திலிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். மேலும் பேரிடர் காலங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு சென்று உதவிகளையும் செய்திருக்கிறார்.
அரசுக்கு எதிரான முதல் குரல்
எனவே தொடர்ந்து விஜய் மீது ஒரு பக்கம் மக்களுக்கு எதிர்பார்ப்பு வர துவங்கியிருக்கிறது. மேலும் சினிமாவை விட்டு விலகுவதாகவும் மொத்தமாக அரசியலில் ஈடுபட போவதாக விஜய் கூறி இருப்பதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோடிகளில் வருவாய் வரும் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வர விஜய் நினைக்கிறார் என்றால் அவர் நிச்சயம் மக்களுக்கு ஏதாவது செய்வார் என்று மக்கள் நம்ப துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளானது அதிக சர்ச்சையாகி வந்தது. இந்த நிலையில் இதற்கு நடிகர் விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.
குற்றம் சாட்டிய தளபதி
அது தொடர்பாக அவர் போட்ட பதிவில் ”சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். இனி அரசே தவறு செய்தாலும் கூட அதை கண்டிக்கும் வகையில் விஜய்யின் நடவடிக்கைகள் இருக்கும் என்று அவரது சுற்றுவட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.