விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா சொன்ன அந்த வார்த்தை.. இது தான் எலிமினேஷனுக்கு ரீசன்..

பிக் பாஸ் சீசன் 8 ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற ரீதியில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிக அழகான முறையில் நட்போடு அறிமுகம் செய்து வைத்த புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.

இவரது இந்த புதிய அணுகுமுறை குறித்து பலரும் பல்வேறு கருத்து விமர்சனங்களை முன் வைத்துள்ள நிலையில் இந்த சீசன் வெகுவாக அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருக்கும். மேலும் ஆட்டத்தில் எந்த விதமான சுவாரசியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா சொன்ன அந்த வார்த்தை..

அந்த வரிசையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8-ல் புதிய வீடு, புதிய விதிகள் என்ற நிலையில் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் இரண்டாவதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபரானவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு ரீல் மகளாக நடித்தவர். அந்த வகையில் இவரை அறிமுகப்படுத்தும் போது அவர் தன்னை அப்பா என்று கூட ஷோவில் அழைக்கலாம் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியை விஜய் சேதுபதி கொடுத்திருந்தார். அதாவது 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் உள்ளது என்பது தான் அந்த அதிர்ச்சியான தகவலாகும்.

இது தான் எலிமினேஷனுக்கு ரீசன்..

இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது ஆளாக களம் இறங்கிய இளம் நடிகை சாச்சனா பல கனவுகளோடு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். எனினும் அந்த வீட்டில் பாகப்பிரிவினை போல ஆண்களுக்கு ஒரு பக்கம் பெண்களுக்கு ஒரு பக்கம் என்று பிரிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய முடிவை எடுக்கக்கூடிய இடத்தில் இடம் நடிகை இருந்தார்.

இதில் வீட்டில் இருக்கும் ஒரு பெரிய அறையை விட்டுக் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் ஆண்கள், பெண்கள் என யாரையும் நாமினேட் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டார்.

அதற்கு பெண்கள் ஒப்புக்கொண்டு டீல் போட்டனர். ஆனால் இந்த போட்டியில் உள் நுழைந்திருந்த ஜாக்குலின் அந்த கண்டிஷனை சற்றும் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக போராடினார்.

இந்த நிலையில் தான் சாச்சனா பேசும் போது நான் வெளியே போனாலும் பரவாயில்லை. அந்த முடிவு எடுத்த நான்கு பெண்களில் நானும் ஒருத்தி ஒரு வேளை பெண்களை மட்டும் நாமினேட் செய்தால் ஒரு பெண் வெளியே போக வேண்டும் என்ற நியதிக்கு 24 மணி நேரத்தில் அது நானாக இருப்பேன் என கூறினார்.

இதனை அடுத்து தான் 24 மணி நேரத்தில் எலிமினேஷனுக்கு பலரும் அதை காரணமாக கூறியதை அடுத்து நாமினேட் செய்யப்பட்டார்கள். அத்தோடு அதிகம் பேர் நாமினேட் செய்த இளம் நடிகை எலிமினேஷன் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மற்ற பெண்களுக்கு விட்டுக் கொடுக்கத் தான் உங்கள் கனவுகளை விடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தீர்களா? என இணையதளவாசிகள் பலரும் தற்போது இளம் நடிகையின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam