எனக்கு இப்படி யாரும் ப்ரொபோஸ் பண்ணதில்ல.. பல நாள் சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை..

திரை உலகில் நடிக்கும் நடிகைகள் அவரோடு இணைந்து நடிக்கின்ற நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதான ஒன்று அல்ல. அந்த வரிசையில்  தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை விரிவாக அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார்.

நடிகை சரண்யாவை பொறுத்த வரை மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதை அடுத்து 1980-களில் சில படங்களில் நடித்துவிட்டு திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார்.

எனக்கு இப்படி யாரும் ப்ரொபோஸ் பண்ணதில்ல..

இதனை அடுத்து இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அம்மா வேடத்தில் இவர் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார்.

அந்த வகையில் இவர் 2005 ஆம் ஆண்டு ராம் படத்தில் தனது அம்மா கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் இரண்டு முறை பிலிம்பேர் விருது பெற்றிருக்கக் கூடிய இவர் இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இவர் இயக்குனரும் நடிகருமான ராஜசேகரை முதலில் திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்களது திருமணம் நீண்ட நாள் நீடித்து நிற்கவில்லை. எனவே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தார்கள்.

இதனை அடுத்து தான் இவர் சின்னத்திரை சீரியல் நடிகராக திகழ்ந்த பொன் வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்படி அவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இவரிடம் தனது காதலை பொன்வண்ணன் எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பதை ஓபன் ஆக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சீக்ரெட்டை உடைத்த நடிகை சரண்யா..

சீரியல்களில் படு பிஸியாக இருந்த இவரிடம் பொன்வண்ணன் ஒரு முறை போன் செய்து பேசியதை அடுத்து படத்தில் நடிக்க தேதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை சரண்யா எதார்த்தமாக உங்களுக்கு எத்தனை நாள் கால் சீட்டு தேவைப்படும் என்பதை கேட்க அதற்கு பொன்வண்ணன் வித்தியாசமான முறையில் அவரிடம் சுமார் 70 ஆண்டுகள் தேவை என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட நடிகை சரண்யா அதிர்ந்து போனதோடு மட்டுமல்லாமல் இவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட அவர் யோசித்துக் கூறுகிறேன் என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.

இதனை அடுத்து தான் இவர்கள் திருமணம் நடந்ததாக கூறி இருக்கும் அவர் என்னிடம் இது வரை யாருமே இப்படி ப்ரபோஸ் செய்ததில்லை. ஆனால் இவர் தான் இப்படி வித்தியாசமாக ப்ரபோஸ் செய்து என்னை திருமணம் செய்து கொண்டார் என அந்த விஷயத்தை ஓபன் ஆக போட்டு உடைத்து விட்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam