பெட்ல படுக்கிறீங்களா? கொச்சையான பேச்சு.. கண்ணீர் விட்ட பிக் பாஸ் 8 போட்டியாளர் வீடியோ..

பிக் பாஸ் சீசன் 8 களைக்கட்டி வரக்கூடிய இந்த வேளையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சில அதிரடியான விஷயங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை கடந்து விட்ட நிலையில் இந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

பெட்ல படுக்கிறீங்களா?.. கொச்சையான பேச்சு..

இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரம்ப விழாவில் விஜய் சேதுபதி பண்போடும் நட்போடும் அனைவரோடும் சகஜமாக கலந்து பேசுவதை அடுத்து வெகு ஜனங்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கக் கூடிய இவர் இந்த போட்டியை மிக சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கியதாக என்று சொல்லி வருகிறார்கள்.

மேலும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த நிலையில் இந்த 18 போட்டியாளர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில் நாமினேஷன் நடைபெற்று அதிக வாக்குகள் வாங்கிய இடம் நடிகையான விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா வீட்டில் இருந்து வெளியேறி அதிர்ச்சி தந்தார்.

இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் 8 போட்டியாளர்களுக்கு செக் வைத்துவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் தொடர்ந்து கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கிலிருந்து தர்ஷிகா வெற்றி பெற்று முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதன்படி முதல் நாள் பிக் பாஸ் சீரும் சிறப்புமாக சென்ற நிலையில் இரண்டாவது நாளுக்கான முதல் புரொமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

கண்ணீர் விட்ட பிக் பாஸ் போட்டியாளர் வீடியோ..

இந்த புரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் ஆண்கள் அணியில் இருந்து ஒருவரும் பெண்கள் அணியில் இருந்து ஒருவரும் விளையாட வர வேண்டும் என்பது தான் விதிமுறை.

எனவே அதற்கு உரிய நபரை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி ஹவுஸ் மேக்ஸ் அனைவருக்கும் பிக் பாஸ் தற்போது செக் வைத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சுனிதாவிற்கும் ஜாக்குலினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு குழாயடி சண்டையைப் போல ஒரு மாறி உள்ளது. மேலும் இந்த பேச்சு வார்த்தையின் மூலம் ஜாக்குலின் கண்கலங்கி அழுது இருப்பது தெரியவந்துள்ளது.

ஜாக்குலினை வேண்டாத வார்த்தைகளால் கொஞ்சம் கூட யோசிக்காமல் கொச்சையாக பேசி இருக்கும் வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருவதோடு கண் கலங்கிய விஷயத்தை அறிந்து கொண்டு ரசிகர்கள் கலங்கி இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam