பாலு மகேந்திராவால் வஞ்சிக்கப்பட்ட இளையராஜா.. சமயம் பார்த்து தட்டி தூக்கிய ஏ ஆர் ரகுமான்..

சினிமா கலைஞர்களுக்கு விருது என்பது அவர்களை மகிழ்விக்க கூடிய விஷயம் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் பல படைப்புக்களை சிறப்பாக தர ஊக்கப்படுத்தும் விஷயமாக உள்ளது.

அந்த வகையில் மத்திய அரசால் திரைப்பட கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து சிறந்த மொழி படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்படும் அப்படி அளிக்கப்படக்கூடிய விருதுகளில் தேசிய விருது மிக முக்கியமானதாகும்.

பாலு மகேந்திராவால் வஞ்சிக்கப்பட்ட இளையராஜா..

எனவே ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் தேசிய விருதை பெறுவதில் அதிகளவு ஆசை கொண்டிருப்பார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை.

இதே நிலை தான் இசையமைப்பாளரான அனிருத், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் நிலையும் உள்ளது.

இவர்கள் மயிரிழையில் அந்த தேசிய விருதை தவற விட்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது வரை அதிகம் தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்கள் யார் என்றால் அது இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் தான்.

இதில் இசைஞானி இளையராஜா மட்டும் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இதனை அடுத்து கடந்த 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சாகர சங்கமம், சிந்து பைர,வி ருத்ர வீணா, பழசி ராஜா, தாரதப்பட்டை போன்ற படங்கள் இவருக்கு அந்த விருதை வென்று தந்தது.

சமயம் பார்த்து தட்டி தூக்கிய ஏ ஆர் ரகுமான்..

ஆனால் இளையவரானாலும் ஏ ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவை விட அதிக அளவு தேசிய விருதினை வென்றவர் என்று சொன்னால் அது உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

அந்த வகையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ரோஜா, மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை மற்றும் மாம், பொன்னியின் செல்வன் என ஏழு தேசிய விருதுகளை வென்றவர்.

ரோஜா படத்துக்காக தேசிய விருதுக்கான பரிந்துரை லிஸ்டில் ஏ ஆர் ரகுமான் இருந்த போது இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் போட்டியில் இருந்தது. இதில் ஜூரிக்கள் வாக்களித்தால் இரண்டு படங்களுக்கும் தலா ஆறு வாக்குகள் கிடைத்துள்ளது.

இறுதியாக வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க அப்போதைய ஜூரி மெம்பராக இருந்த பாலு மகேந்திரா யாருக்கு ஓட்டு போட்டாலும் அவர் தான் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்த சமயத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு வாக்களித்ததால் தேசிய விருதை ஒரு ஓட்டில் தவறவிட்டார் இளையராஜா.

இந்த விஷயத்தை பாலு மகேந்திரா 31 இல் ஓபனாக கூறியதை அடுத்து இளையராஜாவை வீழ்த்தத்தான் பாலு மகேந்திரா ஏ ஆர் ரகுமானுக்கு ஓட்டளித்தாரா என்ற ரீதியில் ரசிகர்கள் பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam