கண்ணீருடன் கலங்கி நின்ற பேரன்.. கடுப்பாகி களத்தில் இறங்கிய ரஜினிகாந்த்.. நிஜத்துலையும் சூப்பர் ஸ்டார்தாம்பா..

தமிழ் சினிமாவில் யாருமே தொட முடியாத ஒரு உயரத்தில் இருந்து வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி இப்போது வரை மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த் இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இதுவரை தமிழ் சினிமாவிலேயே வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை கொடுத்த படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் இரண்டு இடங்களில் இன்னமும் ரஜினிகாந்தின் படம்தான் இருக்கிறது.

கண்ணீருடன் கலங்கி நின்ற பேரன்

எவ்வளவோ இளம் நடிகர்களும் பெரிய கதாநாயகர்களும் வந்த பிறகும் கூட இந்த இடத்தை இன்னொரு நடிகரால் பிடிக்க முடியவில்லை. அதில் முதலிடத்தில் இருப்பது ரஜினி நடித்த 2.0 திரைப்படம். இரண்டாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் இருக்கிறது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதையும் தாண்டி இயக்குனர் ஞானவேல் காரணமாக அந்த படத்திற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது.

கடுப்பாகி களத்தில் இறங்கிய ரஜினிகாந்த்

இவ்வளவு இருந்துமே கூட தன்னுடைய மகள் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருப்பது ரஜினிக்கு வருத்தத்தை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

ஏனைய நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இவர்கள் இருவரும் பிரிவது குறித்து ரஜினிகாந்த்க்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இதனால் இவர்கள் மகன்கள் இருவரும் கஷ்டப்படுவார்கள் என்பது ரஜினிகாந்தின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இவர்கள் விவாகரத்தை நிறுத்துவதற்கான வேலையில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நிஜத்துலையும் சூப்பர் ஸ்டார்

ஏனெனில் இவர்கள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் பேரன்கள் ரஜினிகாந்திடம் சென்று வருத்தப்பட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரும் வர வேண்டும் என்று கூறிய இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் இருவரையுமே நீதிமன்றத்திற்கு செல்லாமல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இதனை அடுத்து தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அவர்களது விவாகரத்தை நீக்குவது குறித்து யோசித்து வருவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam