மறைந்த ரத்தன் டாடாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா பற்றி அதிக அளவு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும். பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக திகழ்ந்த இவர் தன்னுடைய மாறுபட்ட அணுகுமுறை மூலம் தனது தொழிலில் அபார வளர்ச்சியை அடைந்தார்.

85 வயதான ரத்தன் டாட்டா சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை ஏற்று சீரான முறையில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து நிறுவனத்தின் வருவாயையும் லாபத்தையும் பன்மடங்கு பெருக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மறைந்த ரத்தன் டாடாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

அதை டாட்டா குழுமத்திற்கு தலைமை பொறுப்பில் இருந்த போது பல ஸ்டார்ட்டட் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்ற பெருமை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டு பல வெற்றிகளையும் விருதுகளையும் வாரிக் குவித்தவர்.

இவர் காலத்தில் தான் டாடா நிறுவனம் டாடா உப்பு முதல் ஐடி துறை வரை பல்வேறு வகைகளில் முன்னேற்றத்தைப் பெற்று பலர் மத்தியிலும் பேசும் பொருளானது.

ரத்தம் டாடா தன் வாழ்நாளில் தொழில் துறையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

இவரிடம் இருந்த எளிமை, பணிவு, தொலைநோக்கு சிந்தனை என தன் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை அதிகளவு செய்திருக்கும் ரத்தன் டாடா இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு சுமார் 3800 கோடி இருக்கலாம் என்ற செய்தி 2022 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. சில முக்கிய தரவுகளின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

டாடா அறக்கட்டளை..

அந்த வகையில் ரத்தன் டாட்டாவின் 66% சொத்து என்பது டாடா அறக்கட்டளை மற்றும் அதனுடைய தொடர்பில் இருக்கும் நிறுவனங்களில் இருந்தே திரட்டப்பட்டுள்ளது.

மேலும் tata குழுமத்தின் ஒரு பிரிவாக செயல்படும் டாடா அறக்கட்டளை கல்வி சுகாதாரம் மற்றும் பிற தொண்டு நிறுவன சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

அத்தோடு டாடா குடும்பத்தின் வருவாய் என்பது அந்த அறக்கட்டளையோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் இவரின் சொத்து மதிப்பு மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது.

தற்போது ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பை அறிந்து கொண்ட அனைவரும் வாய்ப்பிளந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்திய தேசத்திற்கு வாரி கொடுத்த வள்ளலை இழந்துவிட்டோம் என்று நாடே துக்கத்தில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய பிரதமர் முதல் தமிழ்நாட்டு சிஎம் வரை ரத்தன் டாடா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam