Biggboss Season 8 Tamil : பெண்களை போய் இப்படி ஆபா*மாய் செய்ய சொல்லலாமா? அர்னவ் டாஸ்க்கால் கடுப்பான அர்ஷிதா, தர்ஷா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே அதில் ஆண் போட்டியாளர்கள் தனியாகவும் பெண் போட்டியாளர்கள் தனியாகவும் போட்டியிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிக பொழுது போக்காக கொண்டு சென்று கொண்டிருப்பவர்கள் ஆண் போட்டியாளர்கள்தான்.

பெண்களை போய்

ஆண் போட்டியாளர்களை பொருத்தவரை அவர்களுக்குள் பெரிதாக சண்டை என்று இல்லை. எந்த ஒரு சண்டை வந்தாலும் அதை ஜாலியாக கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் பெண்களை பொறுத்தவரை அவர்கள் தொடர்ந்து மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருக்கிறார்களே தவிர அவர்களுக்கான விளையாட்டை இன்னும் விளையாட துவங்கவில்லை.

இதனால் பெண் அணியினரை விட ஆண்கள் அணியினர் எல்லா விஷயத்திலும் முன்னிலையில் இருக்கின்றனர் முதல் நாள் விதிமுறைகளை எழுத துவங்கியது முதல் பல விஷயங்களில் ஆண்கள் தொடர்ந்து ஸ்கோர் செய்து வருகின்றனர்.

இப்படி செய்ய சொல்லலாமா

இந்த நிலையில் கோட்டை தாண்டி பெண்கள் ஆண்களின் வீட்டிற்கு வரவேண்டும் என்றாலே அவர்கள் ஏதாவது ஒரு டாஸ்கை செய்துவிட்டுதான் வர வேண்டும் என்று ஒரு விதிமுறை போடப்பட்டிருந்தது.

அதன்படி அப்படி ஆண்கள் வீட்டிற்குள் வர நினைக்கும் பெண்களுக்கு ஜாலியான சில டாஸ்க்க்களை ஒவ்வொரு ஆண் போட்டியாளரும் வழங்கி வந்தனர். ஆனால் இன்று அர்னவ் இப்படி பெண்களுக்கு டாஸ்க்க்களை கொடுக்கும் பொழுது அவற்றில் கொஞ்சம் ஆபாசமிருந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

டாஸ்க்கால் கடுப்பான அர்ஷிதா, தர்ஷா

இன்று ஹர்ஷிதா மற்றும் தர்ஷா இருவருமே சாப்பிட்ட தங்களது தட்டை கழுவுவதற்காக ஆண்கள் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது அவர்கள் செல்ல இருந்த பொழுது அர்னவ் அவர்களை அழைத்து ஒரு ஆபாச நடனத்தைக் கூறி அதை செய்து காட்டினால் தான் உங்களை கோட்டுக்கு அந்த பக்கம் விடுவேன் என்று கூறிவிட்டார்.

இவர்களும் வேறு வழி இன்றி அந்த நடனத்தை ஆடி இருக்கின்றனர் இதனை பார்த்த ரசிகர்கள் பெண்களுக்கு கொடுக்கும் டாஸ்க்களில் சில விதிமுறைகளை கொண்டு வருவது நல்லது. இல்லை என்றால் ஆண்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செய்வார்கள் என்று கூறத் தொடங்கி இருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam