கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசம் செய்த அந்த பிரபலம்.. கமல் பட நடிகையின் பகீர் தகவல்..!

பாலியல் குற்றச்சாட்டுகள் என்பது சினிமாவில் எப்போதும் தீராத விஷயமாக இருந்து வருகிறது எல்லாத்துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்றாலும் கூட மற்ற துறைகளில் பிடிக்கவில்லை என்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வேற வேலைக்காவது செல்லும் வாய்ப்புகள் இருக்கும்.

ஆனால் சினிமாவில் அப்படியான வாய்ப்புகளும் கிடையாது. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே வாழ வேண்டிய சூழ்நிலை பெண்களுக்கு இருக்கிறது. இதனால்தான் நடிகைகள் பலரும் அவர்களுக்கு பெரிய நடிகர்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டாலும் கூட அவற்றை வெளியில் சொல்வது கிடையாது.

நடிகைக்கு நடந்த கொடுமை:

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து சினிமாவில் இந்த பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து தற்சமயம் நிறைய பெண்கள் இந்த விஷயங்களை வெளிக்கொண்டு வர துவங்கியிருக்கின்றனர்.

அதிகபட்சம் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நடிகைகள் தான் இதை கொண்டு வருகிறார்கள் என்றாலும் கூட அட்லீஸ்ட் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனபோது கூட உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்ததற்கு பாராட்ட வேண்டும்.

நாசம் செய்த அந்த பிரபலம்

அந்த வகையில் தற்சமயம் தெலுங்கு சினிமா குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை நடிகை பூனம் கவூர் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் கவூர்.

இவர் மாயாஜாலம் என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக 2006ம் ஆண்டு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் முதன்முதலாக நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கமல் பட நடிகையின் பகீர் தகவல்

இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் உன்னை போல் ஒருவன் பயணம் வெடி மாதிரியான நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இப்பொழுது அவருக்கு முன்பு மாதிரி அதிகமாக வரவேற்புகள் வருவதில்லை.

2022க்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பதே பெரிதாக வரவில்லை. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் இயக்குனர் ஒருவர் செய்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் பூனம் கவுர். அதில் அவர் கூறும் பொழுது தெலுங்கில் இருந்த ஒரு இயக்குனர் ஒருவர் தொடர்ந்து ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

தொடர்ந்து அந்த நடிகையுடன் அவர் தொடர்பில் இருந்த காரணத்தினால் அந்த நடிகை கர்ப்பமானார். பிறகு அதனால் அவர் சினிமா வாழ்க்கையை விட்டு விட்டு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்த விஷயம் அறிந்த தெலுங்கு நடிகர் சங்கம் பிறகு அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்தது என்று கூறியிருக்கிறார் பூனம் கவூர் ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது குறித்து அவர் கூறவில்லை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam