“எனக்கு விஜய் சேதுபதி இதை 14,000 ரூபாய்க்கு வாங்கி குடுத்தாரு..” ஓப்பனாக கூறிய மகாராஜா சாச்சனா..!

விஜய் சேதுபதி 14,000 ரூபாய்க்கு இதை மட்டுமே எனக்கு வாங்கி கொடுத்தார் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் மகாராஜா படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த நடிகை சாச்சனா.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துரதிஷ்டவசமாக 24 மணி நேரத்துக்குள்ளாகவே வெளியேற்றப்பட்டார் சாச்சனா. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டு பண்ணியது..

வளர வேண்டிய நடிகைக்கு இந்த பிக்பாஸ் எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கும். ஆனால், இப்படி 24 மணி நேரத்தில் இவரை வெளியேற்றியதை ஜீரணிக்க முடியவில்லை என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் மகாராஜா படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி உடனான பழக்கம் மற்றும் அனுபவம் குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார் நடிகை சாச்சனா.

அவர் கூறியதாவது படப்பிடிப்பில் ஒரு நாள் ஒரு கடையில் ஷோகேஸில் ஒரு பேக்கை வைத்திருந்தார்கள். அது ஒரு சூட்கேஸ் பேக்.. அதனை பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சரி அது எவ்வளவு என்று கேட்கலாம் என சென்று நான் கேட்டேன். அப்போது அந்த பேக் 8,000 ரூபாய் என்று கூறினார்கள். எனக்கு தூக்கி வாரி போட்டது.

எட்டாயிரம் ரூபாயா என்று நினைத்துக் கொண்டு அமைதியாக நின்று விட்டேன். இதனை எல்லாம் விஜய் சேதுபதி கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார். படப்பிடிப்பின் போது அவர் அருகே சென்றபோது அங்கு என்ன பார்த்துக்கிட்டு இருந்தன்னு கேட்டார்.

அந்த பேக் நன்றாக இருந்தது பார்த்துக் கொண்டிருந்தேன் என சொன்னேன்.. எவ்ளோ விலை சொன்னாங்க..? என்று கேட்டார்.. 8000 சொன்னாங்க என்று கூறினேன்.. உனக்கு புடிச்சிருக்கா என்ன..? என்று கேட்டார். நல்லா இருக்கு அந்த பேக் என்று கூறினேன்.

சரி சரி என்று சொல்லிவிட்டார். அந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் அந்த பேக் என்னிடம் வந்துவிட்டது. அந்த பேக்கை விஜய் சேதுபதி எனக்கு வாங்கி கொடுத்து விட்டார். அதன் பிறகு அவராகவே இன்னொரு பேரை கொண்டு வந்து என்னிடம் காட்டினார். இந்த பேக் எப்படி இருக்கு..? என்று கேட்டார்.

அவர் எடுத்து வந்த பேக் அழகாக இருந்தது. சரி இதையும் வச்சிக்கோ.. என்று அந்த பேக்கையும் எனக்கு வாங்கி கொடுத்து விட்டார். அந்த இரண்டு பேக்கின் மொத்த விலை கிட்டத்தட்ட 14,000 ரூபாய்.

பேக் மட்டுமே எனக்கு 14 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொடுத்திருந்தார். அந்த இரண்டு பாகையும் நான்  அப்படியே பொக்கிஷமாக என்னுடைய வீட்டில் வைத்திருக்கிறேன் என பேசி இருக்கிறார் பிக்பாஸ் சாச்சனா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam