பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல.. உடல் எடை குறைத்து.. ஹாட்டாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அதற்கு முன்பே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் மா டிவியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான லவ் என்ற தொலைக்காட்சி தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் தமிழில் வாணி ராணி, வம்சம், மரகதவீணை, அன்பே வா, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரை பிரபலமாகியது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியது.

அதன் பிறகு கோ இரண்டாம் பாகம், மணல் கயிறு இரண்டாம் பாகம், திரைக்கு வராத கதை, சத்திய சோதனை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படங்கள் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இடையில் உடல் எடை கூடி குண்டாக்கி போனார். இதனால் இவருடைய பட வாய்ப்புகள் குறைந்து போனது.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அதிகமாக உடல் எடை அதிகரித்த காரணத்தினால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

எப்படியாவது மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்று நோக்கில் தற்போது உடல் எடையை குறைக்கும் பயிற்சி ஈடுபட்டிருக்கிறார்.

முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை மேற்கொண்டு உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி கணிசமான உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

இந்நிலையில், இறுக்கமான உரை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிவதே உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam