வேட்டையன் படத்தை காலி செய்யும் அந்த சின்ன படம்… ரஜினிக்கே டஃப் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கல..!

ரஜினி நடிப்பில் தற்சமயம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கும் திரைப்படங்களில் கதை கரு என்பதே பெரிதாக இருக்காது.

படம் முழுக்க சண்டை காட்சிகள் இருக்கும் அதை தவிர்த்து பேசுவதற்கென்று எந்த விஷயமும் இருக்காது. உதாரணத்திற்கு விக்ரம் ஜெயிலர் மாதிரியான திரைப்படங்களை கூறலாம். இந்த திரைப்படங்களில் எல்லாம் சண்டை காட்சிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த சின்ன படம்

இந்த நிலையில் இதிலிருந்து மாறுபட்ட ஒரு திரைப்படமா இருக்கிறது வேட்டையன் என்கின்றனர் ரசிகர்கள். திரைப்படத்தில் ரஜினி ரசிகர்களுக்காக எந்த அளவிற்கு சண்டை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதோ அதே அளவிற்கு மக்கள் மத்தியில் முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் என்கிற நிலைப்பாடு இருந்துள்ளது.

அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் என்கவுண்டர் முறைக்கு எதிரான ஒரு பெரிய விஷயத்தை பேசி இருக்கின்றனர். இதனால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் நாள் வசூலை பொருத்தவரை 80 கோடி ரூபாய்தான் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கே டஃப்

ஆனால் போகப் போக இந்த படத்தின் வசூலானது மிக அதிகரிக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. சில திரையரங்க முதலாளிகளே இதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் இந்த வசூல் முதல் நாள் குறைந்ததற்கு முக்கிய காரணம் எப்போதும் ரஜினி திரைப்படத்திற்கும் கிடைக்கும் அளவிலான திரையரங்குகள் கிடைக்காததுதான் என்று கூறப்படுகிறது.

பொதுவாக ரஜினி திரைப்படங்களுக்கு 800 திரையரங்குகள் கிடைத்துவிடும் ஆனால் இந்த முறை லப்பர் பந்து திரைப்படம் இன்னமுமே 150 திரையரங்குகளுக்கு மேல் ஓடி கொண்டுள்ளது. இதனால் அந்த திரையரங்குகளில் எல்லாம் ரஜினியின் வேட்டையன் வெளியாகவில்லை.

அதுதான் முதல் நாள் வசூல் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட இந்த திரைப்படம் அதன் கதை காரணமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரஜினியின் திரைப்படத்தின் அது போட்டியிடுகிறது என்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam