ரசிகர் செய்த வேலை.. சிக்கலில் சிக்கிய தளபதி.. கடுப்பான ரஜினி.. அரசியலுக்கு வர்ற நேரத்தில் இது வேறயா?..

ரஜினி விஜய் இருவருக்கும் இடையேயான போட்டி என்பது உண்மையில் ரசிகர்களால் உருவான ஒரு விஷயம்தான். ரஜினியும் விஜய்யும் நேரடியாக எங்கேயுமே சண்டை இட்டுக் கொண்டது கிடையாது.

உண்மையில் ஆரம்பத்தில் தனது திரைப்படங்களில் தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை விஜய்யே நிறைய முறை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே சண்டை இருப்பதாக அவர்களது ரசிகர்கள் கிளப்பி விட்டு எப்பொழுதும் அது தொடர்பாக சண்டையிட்டு வந்தனர்.

ரசிகர் செய்த வேலை

இதனால் விஜய் மற்றும் ரஜினி இசை வெளியீட்டு விழாக்களில் கூறும் குட்டி கதைகளை எடுத்து அதை தொடர்புபடுத்தி இவர்களே விஜய்க்கு எதிராக ரஜினி கதை கூறியதாகவும், ரஜினிக்கு எதிராக விஜய் கதை கூறியதாகவும் கதைகளை கிளப்பி விட்டு வந்தனர்.

இறுதியாக ரஜினியே பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் விழாவில் பேசிய பொழுது எனக்கும் விஜய்க்கும் எந்த ஒரு போட்டியும் கிடையாது. எங்களுக்கு நாங்கள்தான் போட்டி என்று வெளிப்படையாக கூறுகிறார். ஆனாலும் கூட விஜய் ரசிகர்கள் ஓய்வதாக தெரியவில்லை.

சிக்கலில் சிக்கிய தளபதி

நேற்று வேட்டையன் திரைப்படம் வெளியானதிலிருந்து வேட்டையன் திரைப்படம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். படம் வெளியாவதற்கு முன்பே தொடர்ந்து படம் தொடர்பான நெகட்டிவ்வான ஹாஸ்டாக்குகளை பரப்பி வந்துள்ளனர்.

இதனால் விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி துவங்கிய பிறகு கூட ரசிகர்கள் இன்னமும் சினிமாவில் உள்ள போட்டி பொறாமை குறித்து யோசித்து வருகின்றனர் என்பதே விஜயின் கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடுப்பான ரஜினி.

ஏனெனில் நடிகர் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை விஜய்யே நேரில் சென்று முதல் நாள் முதல் ஷோவில் பார்த்திருக்கிறார். அப்படி இருக்கும்பொழுது இன்னமும் அவர்களுக்கிடையே இப்படி போட்டி இருப்பதாக சண்டையை உருவாக்கி வருவது சரியல்ல என்பது விஜய் தரப்பு கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில் இதனால் ரஜினி வருத்தப்படக்கூடும் என்பதை அறிந்த விஜய் அவரை நேரில் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam