உங்களத்தான் ஏமாத்தறாங்க போட்டுக் கொடுங்க.. நோ சொல்லி எமோஷனலான FatMan..

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் பேட்மேனுக்கு ஆதரவாக பலரும் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனது உடல் எடை காரணமாக பல்வேறு கேலிப் கிண்டலுக்கு ஆளான நிலையிலும் இவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டு காலில் அடிபட்ட நிலையிலும் தனது மன உறுதியை இழக்காமல் போட்டியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

உங்களத்தான் ஏமாத்தறாங்க போட்டுக் கொடுங்க..

தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8 மக்கள் செல்வன் விஜயசேதுபதி தொகுத்து வழங்கிய வருவது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது. மேலும் கமலஹாசனுக்கு நிகராக இவர் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்கு தக்க பதிலை இவர் தந்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது போட்டிகள் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் சென்று வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் ரசிக்கும்படி உள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரன் காலில் அடிபட்ட நிலையில் இவரோடு இணைந்து போட்டியிடும் சக போட்டியாளர்கள் இவருக்கு உரிய உதவிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

இதற்கு காரணம் விஜே விஷால், ரஞ்சித் சண்டைக்குப் பிறகு பெண்கள் அணியை சார்ந்தவர்கள் அனைவருமே பேட்மேனுக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

இதில் பேட்மேனுக்கு ஆதரவாக பெண்கள் பலரும் இருந்த போதும் அவருக்கு ஆதரவாக பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர் அன்ஷிதா. இதில் நீங்க பிராங்க் பண்ணக்கூடிய விஷயம் அங்கு இருக்கும் முக்கால்வாசி பசங்களுக்கும் தெரியும். அப்படி இருக்க நீங்க ஏன் காட்டிக் கொடுக்க மாட்டேங்கறீங்க.

நோ சொல்லி எமோஷனலான FatMan..

அர்னவ், தீபக், விஜே விஷால் என இவர்கள் மூவருக்கும் தெரிந்ததே அவர்கள் உங்களைத்தான் மாட்டி விட்டார்கள். எனினும் நீங்கள் ஏன் அவர்களை காட்டிக் கொடுக்க தயங்குகிறீர்கள்‌.

மேலும் அவர்களைக் காப்பாற்ற ஏன் முயல வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு பேட்மேன் எமோஷனலாக பேசி இருக்கிறார்.

இதை அடுத்து அன்ஷிதா அந்த மூவர் மீதும் கொல காண்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் நீங்க பிளான் பண்றது தெரிஞ்சும் நீங்க தான் ஏமாற்றி விட்டதா அவங்க போர்ட்ரேட் பண்ணிட்டு இருக்காங்க இதுக்கு எதுக்கு அலோ பண்ணனும்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்சிகா பேட்மேனுக்கு ஆதரவாக சில வார்த்தைகளை பேசி அவரை உற்சாகப்படுத்தி இருப்பது ரசிகர்களின் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்த்தால் தெரியவரும். சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் பிக் பாஸ் 8 சீசன் தற்போது ரசிகர்களின் மத்தியில் களைகட்ட ஆரம்பித்துவிட்டது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam