அது என்ன வெஸ்ட் நைல் வைரஸ்.

கடந்த சில தினங்களாக கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தான் வெஸ்ட் நைல் வைரஸ்.

பொதுவாக தென்மேற்குப் பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும் காலத்தில் ஏற்படும் டெங்கு, எலிக்காய்ச்சல், நிபா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, அந்த மாநில சுகாதாரத்துறை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ் , ஃபிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் , மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குவை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் மற்றும் மூளை அழற்சியை  ஏற்படுத்தும் வைரஸ்களுடன் தொடர்புடையது.

இந்த வைரஸ் காய்ச்சல் க்யூலெக்ஸ் கொசுவின் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது.இநன் மூலம் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த காய்ச்சலுக்கு உயர் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், நரம்புசார் பிரச்னை, சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.

இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937-இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வகை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் ஒருவர் இக்காய்ச்சால் பலியான விஷயம் மேலும் அச்சத்தை தந்துள்ளது.

மேலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காமல் துாய்மையாக வைக்க, பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …