கேரட் மல்லி சட்னி

வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம். அதனை எப்படி செய்வது என இனி காண்போம்.இதில்

கேரட் மற்றும் கொத்தமல்லித் தழையையும் தான் முக்கியமான பொருள். இதனை கொண்டு காரசாரமான ஆந்திரா ஸ்டைலில் ஒரு சூப்பர் சட்னி செய்வதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

கேரட் 100 கி

கொத்தமல்லி இலை 1 கட்டு

எண்ணெய் தேவையான அளவு

சீரகம் – 1/2 ஸ்பூன்

 தோல் உரித்த பூண்டு பல் – 4

 உளுந்து – 1 ஸ்பூன்

 கறிவேப்பிலை பச்சைமிளகாய் – 4

புளி

உப்பு

செய்முறை

200 கிராம் அளவு கேரட்டை தோல் சீவி கொஞ்சம் பெரியதாகவே துருவி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழையை வேரை மட்டும் நீக்கி விட்டு தண்டுகளுடன் கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 4, உளுந்து – 1 ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் – 4, இந்த பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். 

அதன் பின்பு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, துருவிய கேரட் போட்டு, பச்சை வாடை நீங்கும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு கேரட் பச்சை வாடை நீங்கியதும் தயாராக எடுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளை போட்டு 2 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிகக் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி துவையலாக அரைத்து எடுத்து சாதம் அல்லது இட்லி தோசையுடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …