thirupathi

திருப்பதியில் அதிசயம்.. முதன் முதலில் திருப்பதியில் மொட்டையடித்த பெண்..!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் மொட்டை அடித்து முடி தானம் செய்தால் இந்த காணிக்கைக்காக மனம் மகிழ்ந்து இந்த காணிக்கையை செய்யக்கூடிய நபருக்கு 10 மடங்கு உடல் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் அதிகமாக்கி கொடுப்பார் பெருமாள் என்பது நம்பிக்கை.

திருப்பதி பெருமாள் கோயிலில் மொட்டை அடிப்பதற்கான காரணம் என பல்வேறு காரணங்கள் பேச்சுவாக்கிலும் ஊடகங்களையும் உலா வருகிறது. அதில் பிரதானமாக சொல்லப்படக்கூடிய இரண்டு காரணங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடிப்பது என்பது உலகம் முழுதும் இருக்கக் கூடிய பக்தர்களால் செய்யப்படக்கூடிய நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது. கூடுதலாக பெருமாளுக்கு பக்தர்கள் கொடுக்கக்கூடிய முடி காணிக்கை மூலம் தேவஸ்தானத்திற்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

திருப்பதியில் மொட்டை அடிப்பதற்கான வழக்கம் எப்போது தொடங்கியது..? எதனால் இந்த பழக்கம் ஆரம்பித்தது என்ற பின்னணியை நீங்கள் தேடிச் சென்றால் இரண்டு கதைகளை உங்களால் கேட்க முடியும்.

அதில் முதல் கதை என்னவென்றால், பக்தியால் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் வந்தது என்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் மொட்டை அடித்துக்கொண்டால் முழு சந்திரனின் கதிர்வீச்சை மொட்டை அடித்த நபரால் உட்கிரகித்து கொள்ள முடியும்.

thirupathi

அன்னை பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாளை திருமணம் செய்த போது பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பது மாப்பிள்ளை வீட்டாரின் வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கினாராம்.

குபேரனிடம் வாங்கிய கடனை விரைவில் திருப்பி செலுத்துவதாக வெங்கடேஸ்வர சுவாமி உறுதி அளித்திருக்கிறார். அதுவரை அவர் வட்டி கட்டி வருவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

கணவர் வெங்கடேச பெருமாளின் கடனை அடைக்க உதவுவர்களின் செல்வமும் ஆரோக்கியமும் 10 மடங்கு பெருகும் என லட்சுமிதேவி ஆசீர்வாதம் அளித்திருக்கிறார். இதன் பலனாகத்தான் திருப்பதி பெருமாள் கோவில் உண்டியலில் லட்சம் லட்சம் நாங்க அவருடைய பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

முடிக்காணிக்கை மூலமாகவும் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு சுமார் 700 டன்கள் முடி காணிக்கை செலுத்தப்படுகிறது என்றும் மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு முதல் 500 கோடி ரூபாய் வரை திருப்பதி கோவிலுக்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

thirupathi

சரி இப்போது இதனை தொடர்ந்து உலா வரக்கூடிய இரண்டாவது கதையை பார்ப்போம். திருப்பதி ஏழுமலையானின் திருப்பதி மலையில் உள்ள ஏழு மலைகள் நவகிரகங்களில் ராகு கேது நீங்களாக ஏழு கிரகங்களை குறிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த ஏழு மலைகளை கடந்து செல்லும் பொழுது.. குறிப்பாக பௌர்ணமி நாட்களில் இந்த மலைகளை கடந்து செல்லும் பொழுது குறிப்பிட்ட ஏழு கரங்களின் முழு அனுகிரகத்தையும் நம்மால் பெற முடியும். இதனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். உடலில் உள்ள நோய்கள் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை.

மக்கள் மத்தியில் உலா வரக்கூடிய இரண்டாவது கதையானது.. ஒரு முறை திருப்பதி மலையில் புற்று ஒன்றினுள் அமர்ந்து பெருமாள் தியானம் செய்து கொண்டிருந்த பொழுது இதனை அறிந்த பசு மாடு ஒன்று அந்த புற்றுக்குள் பால் சுரந்து பெருமாளின் தாகத்தை போக்கியிருக்கிறது.

thirupathi

நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அறிந்த அந்த பசு மாட்டின் உரிமையாளரான அந்த விவசாயி பசுமாடு புற்றுக்குள் தன்னுடைய பாலை சுரந்து வீணாக்கிக் கொண்டிருக்கிறது என்று கோபமுற்று அந்த பசுவை நோக்கி தான் கையில் வைத்திருந்த கடப்பாரையை வீசியிருக்கிறார்.

அப்போது அந்த கடப்பாரை புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பெருமாள் தலையில் இருந்த தலை முடி கொஞ்சமும் சிதைந்தது.

ஒரு முறை பெருமாளின் மகத்துவத்தை அறிந்து அவரை தரிசனம் செய்வதற்காக நீலா என்ற ஒரு இளவரசி பெருமாளை தரிசனம் செய்வதற்காக திருப்பதி வந்திருக்கிறார். அப்போது சயனித்திருந்திருக்கிறார் பெறுமாம்.

thirupathi

அந்த நேரத்தில் மெல்லமாக காற்று வீசவே பெருமாளின் முடி விலகி அந்த இடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முடி சிதைவுற்று இருப்பதை கவனித்திருக்கிறார் நீலா. இதனால் பார்த்து பதறிப் போன நிலா எம்பெருமானின் தலையில் சிகை சிதைந்து இருப்பதா..? என்று எண்ணி தன்னுடைய தலையில் இருந்த முடியை வேரோடு பிடுங்கி எடுத்து நான் பெருமாள் மீது கொண்டுள்ள பக்தி உண்மை என்றால் என்னுடைய முடி அவருடைய தலையில் ஒட்டிக் கொள்ளட்டும் என்று வேண்டி இருக்கிறார்.

அவர் வைத்த அடுத்த நிமிடமே அவருடைய முடி பெருமாளின் தலையில் ஐக்கியமாக இருக்கிறது. இதுவே திருப்பதியில் முடிக்காணிக்கை கொடுக்கும் பழக்கத்தை உண்டு பண்ணியது என்ற ஒரு கதையும் இருக்கிறது.

** இந்த தகவல் முற்றிலும் பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்று தொற்று தொடரும் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் புலங்கக்கூடிய தகவல் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்த தகவலுக்கும் தமிழகம் தளத்திற்கும் எந்த வகையிலும் பொறுப்பேற்க்காது.

--- Advertisement ---

Check Also

amman

பணம் கையில தங்கவில்லையா..? அக்டோபர் 3 முதல் 12 வரை இதை மட்டும் பண்ணுங்க..! செல்வம் கொட்டும்..!

பொதுவாக உங்களுக்கு சிவராத்திரி பற்றி தெரிந்திருக்கும். ஐயனுக்கு உகந்த நாளன்று எப்படி விரதம் இருந்து ஐயனை வழிபடுகிறோமோ அது போல …