இன்னமும் கோபம் தீரல போல.? விஜய்க்கு மட்டும் நன்றி சொல்லாத ரஜினி.. இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.

நடிகர் ரஜினிக்கு போட்டி நடிகர் என்று பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் இருந்து கொண்டே இருப்பார்கள். நடிகர் ரஜினி எல்லா காலகட்டங்களிலும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மட்டும்தான். அவருடைய காலகட்டம் அளவிற்கு வேறு எந்த நடிகரும் இதற்கு முன்பு கதாநாயகனாக நடித்தது கிடையாது.

கோபம் தீரல போல

அப்படி இருந்தாலும் கூட இளம் நடிகர்களுடன் ரஜினிகாந்த் போட்டி போடுவது இப்பொழுது இருக்கும் ரசிகர்களுக்கு பிடித்த விஷயமாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு நடிகர் விஜய், அஜித் மாதிரியான நடிகர்களுக்கு நிகரான வசூலை எப்பொழுதும் ரஜினிகாந்த் கொடுத்து வருகிறார்.

இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிப்பது கிடையாது இதனை அடுத்து இடையில் விஜய்க்கும் ரஜினிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதனை அடுத்து விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் கூட சண்டை போட்டுக் கொண்டனர்.

நன்றி சொல்லாத ரஜினி

மேலும் நடிகர் விஜய் ஜெயிலர் படத்தின் விழாவில் பேசும் பொழுது ஒரு காக்கா கழுகு கதை கூறினார். அதில் காக்கா என்று அவர் விஜய்தான் குறிப்பிட்டார் என்று கூறியும் பிரச்சனைகள் துவங்கி இருந்தன. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய் மேலும் சர்ச்சையை அதிகமாக்கினார்.

பிறகு சர்ச்சையை ரஜினிதான் மீண்டும் ஒரு விழாவில் பேசி முடித்து வைத்தார். எப்பொழுதும் அவர் விஜய்யை தனது போட்டியாக நினைத்தது கிடையாது என்று அதில் பேசியிருந்தார் ரஜினிகாந்த். இருந்தாலும் கூட அவருக்கு விஜயின் மீது கோபம் இருந்து வருவதாக ஒரு பேச்சு உண்டு.

இந்த விஷயத்தை கவனிச்சீங்களா

ஏனெனில் அவர் சாதாரணமாக கூறிய அந்த காக்கா கழுகு கதையை விஜய் கூட தவறாக புரிந்து கொண்டு அதற்கு பதில் அளித்து இருக்கிறாரே என்கிற கோபம் ரஜினிக்கு இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த சமயத்தில் பலரும் அது குறித்து பதிவுகளை போட்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து பிறகு ரஜினிகாந்த் பதிவு வெளியிட்டிருந்தார். ஆனால் நடிகர் விஜய்க்கு மட்டும் அவர் நன்றியே கூறவில்லை இந்த நிலையில் இன்னும் ரஜினி விஜய் மீது கோபத்தில் தான் இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam