பிக் பாஸ் 8 அடுத்த ஆப்பு ரெடி! நாமினேஷன் லிஸ்டில் சிக்கியது இவரா?..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தற்போது பிக் பாஸ் சீசன் 8 மிகச் சிறப்பான முறையில் நடந்துள்ளது.

முதல் வாரம் பேட்மேன் ரவீந்தர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் இரண்டாவது வாரம் எலிமினேஷனுக்கு ஆள் ரெடி என்று சொல்லக்கூடிய வகையில் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி இருக்கக்கூடிய நபர்கள் யார்? யார்? என்பதை விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

பிக் பாஸ் 8 அடுத்த ஆப்பு ரெடி..

18 போட்டியாளர்களுடன் நடக்கும் இந்த சோவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது பணியை சீரும் சிறப்புமாக செய்து வரக்கூடிய சூழ்நிலையில் முதல் முறையாக பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே ஆண்கள் பெண்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வரும் இந்த நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். மக்கள் அளிக்கக்கூடிய வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வெளியேற்றம் நடைபெறும். அதன்படி கடந்த வாரம் மக்கள் அளித்த குறைந்த வாக்குகளின் அடிப்படையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவரை அடுத்து இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேஷன் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதில் யார் யார் நாமினேட் ஆவார்கள் என்ற விவரம் புரோமோ ஒன்றில் வெளியாகி உள்ளது. இதில் அதிகப்படியான போட்டியாளர்கள் ஜெஃப்ரியை தான் நாமினேட் செய்திருக்கிறார்கள்.

மேலும் சௌந்தர்யா, தர்ஷா குப்தா, சாச்சனா நமீதாஸ் ஆகியோர் கானா ஜெப்ரியை நாமினேட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. ஜெப்ரிக்கு அடுத்ததாக தான் சுனிதா ஆனந்தி தர்ஷிகா ஆகியோர் நாமினேட் செய்து இருப்பதாக தெரிகிறது.

நாமினேஷன் லிஸ்டில் சிக்கியது இவரா?..

இந்நிலையில் ஆண் போட்டியாளர்கள் ரஞ்சித், அருண், தீபக் ஆகியோர் சௌந்தர்யாவை நாமினேட் செய்திருப்பதால் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று சொல்லலாம். மேலும் வயசு வித்தியாசத்தை தாண்டி சில விஷயங்களை பேசுவதாக சொல்லி சாச்சனாவை விஜே விஷால் மற்றும் சத்யா ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த விஷயங்களை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு இணைந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்ற விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam