பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் “நாட்டாமை” டீச்சரின் மகள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

தமிழ் திரைப்படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெளி வந்த திரைப்படம் தான் நாட்டாமை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கிராமத்து வாசனை அப்படியே நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய எந்த திரைப்படம் வசூலை வாரி தந்ததோடு மட்டுமல்லாமல் சரத்குமாருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்தது.

இந்தப் படத்தில் நாட்டாமையாக நடித்த விஜயகுமாரின் நடிப்பு பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றது போல ஒரு இரு காட்சியில் வந்து சென்ற நாட்டாமை டீச்சர் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.

பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் “நாட்டாமை” டீச்சரின் மகள்..

இந்தப் படத்தில் நடித்த டீச்சர் வேறு யாருமில்லை ராணி என்கின்ற ராக்ஷா இவர் நம்ம அண்ணாச்சி ராசையா, கர்ணா, காதல் கோட்டை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் விக்ரம் நடிப்பில் வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலில் அசத்தலான நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து சினிமாவில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு அதிகளவு சினிமா வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த பக்கா என்ற திரைப்படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய இவர் வம்சம், நந்தினி சீதாராமன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் இவரது மகள் தார்மிகா ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார் அதுவும் யார் படத்தில் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

இந்த திரைப்படமானது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தமிழக மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி என்கின்ற படத்தில் தான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இதை அடுத்து நாட்டாமை டீச்சருக்கு தார்மிகா என்ற இவ்வளவு பெரிய பெண் இருக்கிறாரா? என்று ஆச்சரியத்தோடு ரசிகர்கள் பேசி வருவதோடு எந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் விரைவில் தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்து முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்று இருவருக்குமே வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam