தமிழ் பொண்ணா போனதுதான் தப்பு.. ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிக்காவுக்கு நடக்கும் கொடுமைகள்!.

இந்திய அளவில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தெலுங்கு கன்னடம், தமிழ், ஹிந்து என்று நான்கு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவர்தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் பொறுத்தவரையில் இதுவரையில் கமல்ஹாசன்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

தமிழ் பொண்ணா போனதுதான் தப்பு

ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதே போல ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழுக்கு முன்பிருந்தே ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த முறை ஹிந்தி பிக் பாஸில் தமிழ் போட்டியாளராக நடிகை ஸ்ருதிஹா களமிறங்கி இருந்தார். சென்ற முதல் வாரமே மக்கள் மத்தியில் இவர் ஸ்கோர் செய்ய துவங்கி விட்டார்.

ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிக்காவுக்கு நடக்கும் கொடுமைகள்

அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு பிடிக்க துவங்கியது மேலும் அங்கு சென்று ரஜினி பாடல்கள் பாடுவது மற்ற போட்டியாளர்களுக்கு தமிழை கற்றுக் கொடுப்பது என்று அவர் செய்து வரும் சேட்டைகள் மக்களுக்கு பிடித்ததாக இருக்கிறது.

எனவே மற்ற போட்டியாளர்களை விடவும் இப்பொழுது ஸ்ருதி முக்கியமான போட்டியாளராக மாறி இருக்கிறார். இது ஹிந்தி பிக் பாஸில் இருக்கும் பலருக்குமே கடுப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மற்ற ஹிந்தி போட்டியாளர்கள் ஸ்ருதிஹாவை கட்டம் கட்ட துவங்கியிருக்கின்றனர். தொடர்ந்து இவர் பிக்பாஸில் இருப்பது இவருக்கு மட்டும்தான் அதிக வரவேற்பை ஏற்படுத்தும்.

மேலும் இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் இப்பொழுது அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை பார்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து இந்த வாரங்களில் அவரை அவமானப்படுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள் என்று கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam