எங்கள கீழே போட்டு உன்ன நல்லவனா காட்டணுமா? அர்னவ்வை கிழித்து தொங்க போட்ட பாய்ஸ் டீம்..

விஜய் டிவியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வசனத்தோடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பரபரப்பான சூழ்நிலையில் சூடு பிடித்து வருவது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் 8 வீட்டில் பாய்ஸ் டீம் கேர்ள்ஸ் டீம் என்று இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் பல்வேறு கட்டங்களில் நடக்க சிலர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது உங்களுக்கு தெரியும்.

எங்கள கீழே போட்டு உன்ன நல்லவனா காட்டணுமா?

அந்த வகையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் கட்டாயம் இவர் வெளியேற்றப்படுவார் என்ற பேச்சுக்கள் பரவலாக அடிபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் செய்திருக்கும் விஷயம் கண்டிப்பாக இவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நிலை நிறுத்த முடியாமல் வெளியேற்றும் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

இதற்குக் காரணம் ஆண்கள் டீமில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தையுமே பெண்கள் டீமில் அப்படியே சொல்லி விடுவதாக சில விஷயங்கள் கசிந்ததை அடுத்து இதை தனக்கு சாதகமாக தர்ஷா பெண்கள் அணியில் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது பாய்ஸ் டீமில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் பாய்ஸ் டீம்மில் இருக்கும் அர்னவ்வை அனைவரும் வைத்து செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அர்னவ்வை கிழித்து தொங்க போட்ட பாய்ஸ் டீம்..

அதுமட்டுமல்லாமல் ஆண்கள் அணியில் இருக்கும் அனைவரையும் கீழே தாழ்த்திவிட்டு தன்னை மட்டும் நல்லவனைப் போல பாவித்து மற்றவர்கள் முன்னாடி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அர்னவ் இப்படி செய்து விட்டான் என்று ஆண்கள் அணியில் இருப்பவர்கள் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தன்னை நல்லவன் போல் பெண்கள் அணியில் காட்டிக் கொள்ள அர்னவ் முயற்சி செய்து இருப்பதை அடுத்து யாருக்காக இந்த கேமை விளையாடுகிறாய் என்ற கேள்வியை கேட்டதோடு நிற்காமல் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு கிழி கிழி என்று கிழித்து இருக்கிறார்கள்.

மேலும் விஷால் பேசுவது டென்ஷனை ஏற்படுத்துவது போல் இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய மண்டையை தின்பது போல் இருப்பதாக கேர்ள்ஸ் டீமில் பலர் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை தர்ஷா குப்தா விஷால் இடம் தெரிவிக்க சும்மாவே ஆடக்கூடிய காலில் சலங்கையை கட்டி விட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஆட ஆரம்பித்திருக்கிறார்.

ஏற்கனவே ஓட்டின் அடிப்படையில் அர்னவ் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது மீண்டும் இது போல தில்லாலங்கடி வேலைகள் செய்தால் அவருக்கு நிச்சயம் ஓட்டு வங்கி கிடைக்காது. எனவே இந்த வார எலிமினேஷனில் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அதிகரிக்கும்.

எனவே அர்னவ் அடக்கி வாசிப்பது தான் நல்லது என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற விஷயத்தை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam