இன்று வேலை வாய்ப்பு பதிவில் நீங்கள் பார்க்கக்கூடிய வேலைவாய்ப்பு என்னவென்றால் ரயில்வே துறையில் இருக்கும் காலி பணி இடங்கள் பற்றிய விவரங்கள் தான்.
அரை காசு என்றாலும் அது அரசாங்க காசாக இருக்க வேண்டும் என்று இன்றும் பல நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை அதுவும் மத்திய அரசு வேலை என்றால் கசக்கவா செய்யும்.
அந்த வகையில் நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 8,113 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை நீங்கள் இணையதளத முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் இதற்கு கடைசி தேதி அக்டோபர் 20 என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்னும் எதற்காக தாமதிக்கிறீர்கள். உடனே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிக்குள் செல்லுங்கள் உங்களது அப்ளிகேஷனை ஃபில் செய்து அனுப்புங்கள்.
இந்த அப்ளிகேஷனை ஃபில் செய்வதற்கு முன்பு நீங்கள் 18 வயது முதல் 36 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
இதில் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், தட்டச்சு உள்ளிட்ட காலி பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
இந்த வேலைகளை பெற நீங்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் உங்கள் பகுதிகளை நிரூபித்தால் இந்த வேலை உங்களுக்குத்தான்.
எனவே மறக்காமல் இன்றே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். உங்கள் விண்ணப்பங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.