தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படங்கள் என்றாலே அது வெற்றி படமாகதான் இருக்கும் என்கிற ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கிறது.
உண்மையில் நம் சினிமாவை பொறுத்தவரை அதில் இயக்குனருக்கான மார்க்கெட் உருவாவது என்பது ஆரோக்கியமான விஷயமாகும் ஒரு நடிகருக்காக திரைப்படம் பார்ப்பது என்பதிலிருந்து மாறி ரசிகர்கள் ஒரு இயக்குனருக்காக திரைப்படம் பார்க்க துவங்கும் பொழுது இயக்குனருக்கான பொறுப்பு என்பதும் அதிகமாகிறது.
அதெல்லாம் தேவையே கிடையாது
அதனால் முந்தைய படங்களை விட தொடர்ந்து அடுத்த திரைப்படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்கள் நினைக்கத் துவங்குகின்றனர். அப்படியாகதான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறார்.
ஆனால் சில சமயங்களில் அதில் சிக்கல்களும் ஏற்படுவது உண்டு உதாரணத்திற்கு விக்ரம் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அதற்கு பிறகு எடுக்கப்பட்ட லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து இருந்தார்.
போயிட்டே இருப்பேன்
அது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதால் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஒரு திரைப்படம் இயக்கும்பொழுது வரும் பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார்.
அதில் மாணவர் ஒருவர் லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் பொழுது நாம் ஒரு புது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறோம் அந்த சமயத்தில் நம்முடன் பணி புரியும் மற்ற துறையினர் அனுபவமிக்கவர்களாக இருக்கின்றனர்.
கடுப்பான லோகேஷ் கனகராஜ்
உதாரணத்திற்கு கேமராமேன் ஸ்டண்ட் மாஸ்டர் போன்றவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் சொல்வதைக் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு படத்தில் காட்சிகளை மாற்றுகிறார்கள் என்றால் அதை எப்படி நாம் கையாள்வது என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் படத்தில் எந்த ஒரு விஷயத்தை யார் மாற்றினாலும் படம் வெளியான பிறகு அது நன்றாக இல்லை என்றால் இயக்குனரைதான் திட்டுவார்கள். அதனால் அதற்கு நாம் எப்பொழுதுமே அனுமதிக்க கூடாது என்னுடைய முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே நான் இந்த விஷயத்தை எல்லாம் அனுமதிக்கவில்லை.
ஒருவேளை அப்படி யாராவது என்னை மீறி ஒரு காட்சியை மாற்ற நினைத்தால் அன்று படப்பிடிப்பையை நான் நிறுத்தி விடுவேன் என்று வெளிப்படையாக கூறுகிறார் லோகேஷ் கனகராஜ்