தப்பானவங்களோட அம்மாவுக்கு இருக்கும் பழக்கம்..! அதிர்ச்சி கொடுத்த வி.ஜே அர்ச்சனா மகள்.!

சின்னத்திரை என்கிற விஷயம் உருவாகி பிரபலமாக துவங்கிய காலகட்டங்களில் இருந்த தொடர்ந்து ஒரு தொகுப்பாளராக அதிக பிரபலமாக இருந்து வருபவர் அர்ச்சனா. அர்ச்சனா 2000 ஆம் ஆண்டு சன் டிவியில் அதிக பிரபலமான காமெடி டைம் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக முதன்முதலாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

காமெடி டைம் நிகழ்ச்சி ஏழு வருடங்கள் சன் டிவியில் மிகச் சிறப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இதன் மூலமாக அவருக்கு வரவேற்புகளும் அதிகமாக கிடைத்தது. தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு காமெடி டைம் நிகழ்ச்சி முடிந்த பிறகு இளமை புதுமை என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அம்மாவுக்கு இருக்கும் பழக்கம்

அதற்கு பிறகு விஜய் டிவி சென்ற அர்ச்சனா அங்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்படியாக சன் டிவி, விஜய் டிவி என்று இரண்டு சேனல்களிலும் இப்பொழுது வரை அதிக நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் வி.ஜே அர்ச்சனா.

இதனாலேயே சின்னத்திரை மக்கள் மத்தியில் இவர் அதிக பிரபலமாக இருந்து வருகிறார். இதற்கு நடுவே திரைப்படங்களிலும் அவ்வப்போது இவர் நடித்து வந்திருக்கிறார். திரைப்படங்களைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

அதில் அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு வைகை எக்ஸ்பிரஸ் ஆடை மாதிரியான சில திரைப்படங்களில் இவருடைய பங்கு இருந்தது.

அதிர்ச்சி கொடுத்த வி.ஜே அர்ச்சனா மகள்.!

ஆனால் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது டாக்டர் திரைப்படத்தில் தான். இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் படம் முழுக்கவே வரக்கூடிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ச்சனா.

இப்பொழுது திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என்று இரண்டிலுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகளான சாரா என்பவர் தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். அவரும் அர்ச்சனா போலவே அதிக பிரபலமடைவார் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் போட்டியில் கூறும் பொழுது உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சாரா எனது அம்மா தவறானவர்களை உடனே நம்பி விடுவார். அது எனக்கு பிடிக்காது ஒருவரை எப்படிப்பட்டவர் என்று எனது அம்மாவிற்கு எடை போட தெரியாது. அவர்கள் பொய் கூறினாலும் கூட அதை அப்படியே உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பார் நானும் ஆரம்பத்தில் அம்மாவை போல தான் இருந்தேன் பிறகு தெளிவடைந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் சாரா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam