காதலுக்கு சம்மதம் சொன்ன பிறகு.. நடிகர் கொடுத்த பதில்.. கை எல்லாம் நடுங்கி போச்சு.. 22 ஆண்டு ரகசியம் உடைத்த தேவதர்ஷினி..!

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தேவதர்ஷினி. சின்னத்திரை தாண்டி திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை தேவதர்ஷினி.

அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் காமெடி நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்த தனக்கான தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் நடிகை தேவதர்ஷினி என்று கூறலாம்.

அந்த அளவுக்கு இவருடைய காமெடிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. இவர் சக நடிகர் சேத்தன் என்பவரை கடந்த 22 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நியத்தி கடம்பி என்ற ஒரு மகளும் இருக்கிறார். இவருடைய மகளும் தற்போது திரைத்துறையில் அடி எடுத்து வைத்து தன்னுடைய அடுத்த கட்ட நிகழ்வுகளை செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய காதல் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை தேவதர்ஷினி.

அதாவது தங்களுடைய காதல் ஆரம்பித்த இடம் எது..? காதலை முதலில் வெளிப்படுத்தியது யார்..? அதனை ஒப்புக்கொள்ளும் போது நடிகர் சேத்தன் கொடுத்த பதில் என்ன..? உள்ளிட்ட ரகசியங்களை உடைத்து பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, மர்ம தேசம் சீரியலின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் முதலில் காதலை வெளிப்படுத்தியது சேர்த்தன்தான். முதன்முதலாக அதாவது அவர் காதலை வெளிப்படுத்திய பிறகு நான் அவரிடம் பேச சொல்கிறேன்.

ஐ லவ் யூ சேத்தன் என்று கூறினேன். அதற்கு அவர் கொடுத்த பதிலை கேட்டு.. இங்கே நிற்பதா..? இல்ல.. தெறிச்சு ஓடுவதா..? என்று தெரியாமல் மிரண்டு போனேன் என்று கூறியிருக்கிறார்.

நான் ஐ லவ் யூ என்று சொன்ன அடுத்த நிமிடமே.. வாட்..? என்ன ஒரு கோ இன்ஸிடன்ட்.. நானும் என்னை லவ் பண்றேன் என்று கூறினார்.

எனக்கு கை கால் எல்லாம் நடுங்கி விட்டது. என்ன இந்த மனுஷன்.. நாம் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்.. இவரும் நானும் என்னை தான் லவ் பண்றேன்னு சொல்றாரே.. என்று எதுவும் புரியாமல் சில வினாடிகள் நின்றேன்.

அதன் பிறகு சில மாதங்கள் காதலித்தோம்.. திருமணம் செய்து கொண்டோம் என பேசியிருக்கிறார் தேவதர்ஷினி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam